கொட்டாவி விட்டால்..!

கொட்டாவி விட்டால்..!
கொட்டாவி

கொட்டாவி

கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூற வேண்டுமா??
பதில் : அப்படி கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தவித வழிகாட்டலும் கிடையாது. ஏனெனில், நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி கூறியதாக எந்தவித ஹதீஸ்களும் கிடையாது.
மேலும் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கொட்டாவியைப்பற்றி கூறும்போது :
அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்“ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு “யர்ஹமுகல்லாஹ்” (“அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக“ என) மறுமொழி கூறுவது அவசியமாகும்.
கொட்டாவியை பொருத்தமட்டில் அது ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் “ஹா“ என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.
என அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார்.
ஜஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78 -நற்பண்புகள்-ஸ
மற்றுமொரு அறிவிப்பில் ;
கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா“ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.
என அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார்.
ஜஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 59 – படைப்பின் ஆரம்பம்-ஸ
மற்றுமொரு அறிவிப்பில்;
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஜஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 53 -உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்-ஸ
கொட்டாவி விட்டால்..!
எனவே, கொட்டாவி வருகின்ற வேலை
1- நாம் அதனை முடியுமானவரை தடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அதனையும் தாண்டி வந்தால்
2- நம் கையை வாயில் வைத்து மறைத்துக்கொண்டு “ஹா” என்று சம்பதமின்றி கொட்டாவி விடவேண்டும்.
இதுதான் நபியவர்கள் நமக்குக் காட்டித்தந்த வழிமுறையாகும்.
இதைவிட்டுவிட்டு நாமலாக ஒன்றை உருவாக்கி செய்வது என்பது பாவத்தை மாத்திரமே கொண்டுவரும்.
இதைக்கூறினால் ஒருசிலரிடமிருந்து இன்னுமொரு கேள்வி வரும். அது என்னவென்றால் “ஷைதானை விரட்ட ஹஅஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்ஹ என்று கூறுதல்.
எனவே, கொட்டாவி என்பது ஷைதானிடமிருந்து வருவதால் அவனை (ஷைதானை) விரட்ட அப்படி ஹஅஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்ஹ என்று கூறுவதில் என்ன தவறு இருக்கின்றது??????”
முதலில் இப்படியாக கூறுபவர்கள், “மார்க்கம் என்பது அல்லாஹ்வின் கட்டளைப்பிரகாரம் நபியவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் வந்ததாகும்” என்று விளங்கிக்கொள்ள வேண்டும். அதனை விட்டுவிட்டு அப்படி செய்தால் , இப்படி செய்தால் நல்லதுதானே என்று…
நாங்களே மார்க்கத்தில் ஒன்றை உறுவாக்குவது நன்மைக்குப் பகரமாக தீமையையே கொண்டுவரும்.
மேலும், நபியவர்கள்
கொட்டாவி

கொட்டாவி

தும்மலின்போது,
– அல்ஹம்துலில்லாஹ்
– யர்ஹமுகல்லாஹ்
– யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்
என்ற ஒழுங்கை கற்றுத்தந்தவர்களுக்கு……
கொட்டாவியின்போது,
– அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம் என்று கூறுமாறு கற்றுத்தர மறந்துவிட்டார்களா???
எனவே, நாங்களாகவே இப்படி கூறுவது என்பது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தில் குறைகண்டவர்களாக ஆகிவிடுவதுடன், அல்லாஹ்விடத்தில் பாவத்திற்குரிய தண்டனைக்கும் உள்ளாக வேண்டி வரும்.
எனவே, நாம் அல்குர்ஆன், ஹதீஸ் வழியில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வதற்கு வல்லவன் அல்லாஹ் அருள்புரிவானாக!!!!
றஸீன் அக்பர் (மதனி)

Related Post