திறவுகோல்..!

-உம்மு அமீரா
அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்

அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்

லிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். 

ஒவ்வொரு நாணயத்துக்கும் இரு பக்கம் இருப்பது போல வாழ்வாதாரம் தந்து அகிலத்தை பரிபாலிக்கும் நேரமாக வைகறைப் பொழுதை குறிப்பிடும் எல்லாம் வல்லோன், ஆணவத்தில் மிகுந்த சமூகத்தை எல்லாம் அழித்ததும் இதே வைகறைப் பொழுதுகளில்தான்…

“இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில் அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் தென்படவில்லை” (46:25) — இது ஹூது(அலைஹிஸ்ஸலாம்) கூட்டத்தாருக்கு.
“திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) — இது ஸாலிஹ் நபி (அலைஹிஸ்ஸலாம்) கூட்டத்தாருக்கு.
“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37) — இது ஷூஐப் நபி (அலைஹிஸ்ஸலாம்) கூட்டத்தாருக்கு.
“ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது.” (54:38) — இது லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) சமூகத்தாருக்கு.

எனவே விழித்தெழுங்கள். அர்-ரஹ்மானின் கருணையை, பேரருளை அள்ளிக்கொள்ளுங்கள். அலட்சியப்படுத்துபவராகவோ, நிராகரிப்பவராகவோ இருந்து விடாதீர்கள். ஏனெனில் தொழுகை, தொழுகை மட்டுமே மானக்கேடான காரியஙளிலிருந்து ஒரு மனிதனைக் காப்பாற்றும்.

“நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).” (29:45)

Related Post