ரமளான் சிந்தனைகள்! – 1

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் உங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் உங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ங்கள் வாழ்வு.., நாழிகைகள் ஒவ்வொன்றும் இணைந்த அதிமுக்கிய சோலைவனம். அதனைப்பாலைவனமாக்காமல் காப்பது உங்கள் அழகிய ஆளுமைத்தனம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களையும் அலசி ஆராய்ந்து மதிப்பிட்டுக் கொள்வது கட்டாயம். நீங்கள் பயணிக்கும் திசைகளை சரியான பாதைக்கு மாற்றி, இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்ள உதவும் கண்ணாடி வளையம். இறை நாடின், அதற்கு துணைபோகும் வகையில் அமையும் இந்த  சுய மதிப்பீட்டுப் படிவம்.உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் உங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படும் முன் நீங்களே எடை போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் உமர் இப்னு கத்தாப் (ரலி).இதன் அடிப்படையில் என்றாவது நாம் நம்மை.., நமது வாழ்வை மதிப்பீடு எனும் துலாக்கோலில் நிறுத்தி.., சுயமே மதிப்பீடு செய்திருக்கின்றோமா.. பொருளாதாரம் நாடி எமது வாழ்க்கை நேரத்தை வரையறை இல்லாமல் செலவழிக்கும் நாம்.., மறுமைப்பேற்றை ஈட்டக்கூடிய வகையில் அதனை நிலைநிறுத்த.., எம்மைமுன்னெடுத்துச் சென்று சில நாழிகைத்துளிகள் அதற்காக செலவழித்திருக்கின்றோமா.. வருடத்தின் பல பெரும்பாலான மாதங்களில் எமது வசதிகளுக்காக காலத்தை செலவிடும் நாம்.., நம்மையே சுயமதிப்பீடு செய்துகொள்ள.., குறைந்தபட்சம் ரமளான் எனும் புனித மாதத்திலாவது சில நிமிடங்கள் செலவு செய்து எமக்கு நாமே மதிப்பிட்டு.., அதனை அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் வரையறுத்துக் காட்டிய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்த்து.., இனிவரும் காலங்களிலாவது எம்மை இருமை வெற்றிக்குரியவர்களாக மாற்றிக் கொள்ள.., எமது இவ்வாழ்வை புடம் போட்ட தங்கம் போன்று ஆக்கிக் கொள்ள முயற்சிப்போம்.. நாம் இங்கே வடித்திருக்கும் இந்த சுயமதிப்பீட்டுப் படிவம் அதற்கு உதவி செய்யும் என்று நம்புவோம். அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்.

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. உவகையான.., மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்வும்ம் ஆழமாகி இருக்கின்றதா..

3. அல்லாஹ்வுடனான உங்கள்  உள்ள தொடர்புகளில்  அலட்சியமாக இருந்தீர்களா

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துஆ-பிரார்த்தனை  மூலம் உரையாடியிருக்கின்றீர்கள்..

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை செவிமடுத்திருக்கின்றீர்கள்

6. துன்பம்,துயரம்,கவலை,சோகம், சிரமம், தேவை,போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையுணர்வையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, திருக் குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துஆக்கள்-பிரார்த்தனைகளை மனப்பாடம் செய்கின்றீர்களா

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை தூண்டியிருக்கிறீர்களா

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும்திருக்  குர்ஆனின் ஒரு வசனத்தையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா.. இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா..

2. இஸ்லாமிய கல்வி அமர்வுகள் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது.. எப்படி அந்தத் தடையை நீக்கலாம்.. என்று சிந்தித்திருக்கின்றீர்களா

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்திருக்கின்றீர்களா..

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாமிய அறிவில்.., நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை.. என்பதை அடையாளம் கண்டிருக்கின்றீர்களா..

5. நீங்கள் அல்லாஹ்வின் உவப்பை நாடி மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகவா

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய நூல்கள் வாசித்திருக்கின்றீர்கள்

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய ஒளிப்பேழைகளை அல்லது  குறுந்தகடுகளைப் பார்த்தீர்கள்

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஒலிப்பேழைகளை செவிமடுத்திருக்கின்றீர்கள்

10. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் சாதன வழி எது (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா.. அவர்கள் அறியாமையில் இருப்பின் அவற்றைக் களைய ஏதாவது முயற்சி எடுத்திருக்கின்றீர்களா.

உங்களுடைய தொழுகை:islamic,mosque,muslim,woman-b76402e154e2859dfae8498341a92aa5_h

1. நாள்தோறும் ஐவேளை தொழுகிறீர்களா

2. ஒரு நாளில்.., எந்தெந்த வேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் கூட்டாக தொழுதீர்கள்..

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா..

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா.. அல்லது நீங்கள் தொழுவதுதான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டு சமாதானமாகி விடுகிறீர்களா

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா..

6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனமான அலட்சியத்த்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா

7. கடமையான (பர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா

8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம் என்று எண்ணியதுண்டா..

9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துஆ பிராரத்தனை செய்திருக்கிறீர்களா..

பகுதி இரண்டு:

உங்கள் குடும்பம்:

ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின்பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின்பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்தின் சார்பாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்..

2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் உவப்புக்காகவா அல்லது சுயஇலாபத்துக்காகவா..

3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின்பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா

4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள்.. உள்ளிட்ட இன்ன பிற உறவுகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா..

5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் உள்ளிட்ட இன்ன பிற உறவுகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா?

 உங்கள் பெற்றோர்:

1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி..

2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமுள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா..

3. களைய வேண்டிய வெறுப்புக்கள் எதையேனும் வம்படியாக  வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா

4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா

5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 செயல்கள் எவை

6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா..

7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா

8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி.., அதனை நிலைநிறுத்திக் கொள்ள  முயன்றதுண்டா..

9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்..

10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்?

 

Related Post