புனித ரமளான் ஐயங்கள்-தெளிவுகள் -1

அஷஷய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)

கேள்வி:

நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்:

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்

நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:183)

இந்த ஆயத்தைப் பார்த்தால் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். தக்வாவும் அல்லாஹ்வை வழிப்படுவதும்தான் நோன்பு கடமையாக்கப்பட்டமைக்கான காரணமாகும். தக்வா என்றால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து நடப்பதாகும். அதாவது, ஏவப்பட்டதை எடுத்து நடப்பதும், தடுக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதும் தக்வா என்று கூறலாம்.

‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பாணத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
ஆறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி- 1903

நபி(ச) அவர்களின் இந்தப் பொன்மொழியும் நோன்பாளி ஏவப்பட்ட கடமைகளை எடுத்து நடக்க வேண்டும் என்பதையும், தடுக்கப்பட்ட சொற்கள், செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு நோன்பாளி மனிதர்கள் பற்றிப் புறம் பேசலாகாது; பொய் சொல்லலாகாது; மக்களுக்கு மத்தியில் கோள் சொல்லி மூட்டிவிடலாகாது; தடுக்கப்பட்ட விதத்தில் வியாபாரம் செய்யலாகாது. தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் ஒரு மனிதன் இப்படி இருந்து பயிற்சி எடுத்துவிட்டால் அவன் வருடம் முழுவதும் இதனைப் பேணி வாழ்வதற்கான பக்குவத்தைப் பெற்றுவிடுவான்.

ஆனால், அதிகமான நோன்பாளிகளின் நோன்புடைய நாளுக்கும் நோன்பு அல்லாத நாட்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும். அவர்கள் நோன்புக்கு முன்னர் வழமையாக கடமைகளைப் பேணாமலும் ஹறாம்களைச் செய்தும் வந்தார்களோ, அப்படியே நோன்பு காலங்களிலும் நடந்து கொள்கின்றனர். நோன்பினது கண்ணியத்தைப் பேண வேண்டும் என அவர்கள் உணர்வதில்லை. இந்தப் போக்கு நோன்பை முறித்துவிடாது. என்றாலும், நோன்பின் கூலியைக் குறைத்துவிடும். சில போது குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க நோன்பின் கூலிகள் அப்படியே வீணாகிவிடவும் வாய்ப்புள்ளது.
தொகுப்பு: அபூ அப்னான்  &  இளவேனில்

Related Post