புனித ரமளான் ஐயங்கள்-தெளிவுகள் -2

அஷஷய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)

கேள்வி:

 

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்யுறுமையைக் கருத்திற் கொண்டு ‘மக்கா’ பிறையை மையமாகக் கொண்டு ரமழானைத் தீர்மானிக்கும்படியும் ஏனைய அம்சங்களைச் செய்யும்படியும் அழைப்புவிடுப்போர் உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்யுறுமையைக் கருத்திற் கொண்டு ‘மக்கா’ பிறையை மையமாகக் கொண்டு ரமழானைத் தீர்மானிக்கும்படியும் ஏனைய அம்சங்களைச் செய்யும்படியும் அழைப்புவிடுப்போர் உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்யுறுமையைக் கருத்திற் கொண்டு ‘மக்கா’ பிறையை மையமாகக் கொண்டு ரமழானைத் தீர்மானிக்கும்படியும் ஏனைய அம்சங்களைச் செய்யும்படியும் அழைப்புவிடுப்போர் உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:

வானியல் நோக்கில் இந்த வாதம் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். iஷக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றது போல் சந்திர உதயம் இடத்துக்கு இடம் மாறுபடக் கூடியது என்பதில் வானியலாளர்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் உள்ளனர். சந்திர உதயம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது எனும் பொது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் வானியலின் அடிப்படையிலும் அந்தந்த நாட்டில் காணப்படும் பிறையின் அடிப்படையில் செயற்படுவதே சரியாகும்.

இதற்கான மார்க்க ஆதாரம் பின்வருமாறு,

‘யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். ‘
(2:185)

ரமழானை அடைந்தவர்களை அழைத்து நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். பூமியின் ஒரு பகுதியில் இருப்பவர்கள் ரமழான் மாதத்தை அடையவில்லை. அதாவது, பிறையைக் காணவில்லை. உதாரணமாக, மக்காவாசிகள் பிறையைக் கண்டுவிட்டனர். பிறையைக் காணாத மக்கள் ரமழானை அடைந்தால் நோன்பு பிடியுங்கள் என்ற இந்தக் கட்டளைக்கு மாதத்தை அடையாமல் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள்?

நபி(ச) அவர்கள் கூறினார்கள். ‘பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமாக இருந்தால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(வ)
ஆதாரம்: புஹாரி- 1909, முஸ்லிம்- 2597

இவ்வாறு நபி(ச) அவர்கள் கூறியிருக்கும் போது, உதாரணமாக மக்காவாசிகள் பிறை கண்டுவிட்டனர். பாகிஸ்தான் அவர்களுக்குப் பின்னால் உள்ள கிழக்கு மக்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியும்?

நபி(ச) அவர்கள், ‘பிறையைக் கண்டு பிடியுங்கள்’ என்று சொல்லியிருக்க, வானில் பிறை இன்னும் உதிக்கவில்லை என்பதை வானியல் அடிப்படையில் அறிந்து வைத்துள்ள நாம் குறித்த நாளில் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படிக் கூற முடியும்?

அடுத்து, இந்த வாதம் பிழையானது என்பதை அறிவுப்பூர்வமாகவும் நாம் உணரலாம். முரண்பட முடியாத சரியான ஒப்பீட்டு ஆய்வின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

பூமியின் மேற்குப் பக்கத்தை விட கிழக்குப் பக்கத்தில்தான் பஜ்ர் முதலில் உதிக்கின்றது என்பதை நாம் அறிவோம். கிழக்குப் பக்கத்தில் பஜ்ர் உதிக்கும் போது இரவுப் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பு நோற்பது கடமையாகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.

கிக்குப் பக்கத்தில் சூரியன் மறையும் போது பகல் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பைத் திறப்பது ஆகுமானதா? நிச்சயமாக இல்லை.

அப்படியென்றால், சந்திரனும் சூரியனைப் போன்றதே! பிறை என்பது மாதத்தைக் காட்டும். சூரியன் என்பது நாட்களைக் காட்டும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் நோன்பு பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.

‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ் வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான்.’
(2:187)

இவ்வாறு கூறிய அல்லாஹ்தான் அந்த மாதத்தை உங்களில் எவர் அடைகின்றாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று கூறுகின்றான்.

(பஜ்ரை அடைந்தவர் நோன்பைப் பிடித்து, சூரிய மறைவை அடைந்தவர் நோன்பைத் திறப்பது போல் பிறை உதிப்பில் வேறுபாடு இருப்பது போல் பிறை எங்கு தென்பட்டதோ அவர்கள் மீதே நோன்பு பிடிப்பதும், விடுவதும் மார்க்க விதியாகும். மக்கா பிறையை வைத்து பிறை உதிக்காத பகுதியில் இருப்பவர்கள் நோன்பிருக்க முடியாது.

இந்த அடிப்படையில் நோன்பு மற்றும் பெருநாள் விடயத்தில் அல்லாஹ் தனது வேதத்திலும் நபியவர்கள் தமது ஸுன்னாவிலும் காட்டித் தந்த சந்திரனைக் காணுதல் அல்லது பஜ்ரை அடைதல் என்ற உணர்வு ரீதியான அடிப்படையில் அவரவர்குரிய தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்குவதே சரியானதாகும்.

தொகுப்பு: அபூ அப்னான்  &  இளவேனில்

 

Related Post