தொழுகையில் நிகழும் சில தவறுகள்..!

– மஸிய்யா

தொழுகை என்பது இறைவனுடன் நாம் நடத்தும் உரையாடலாக இருக்கின்றது ஒரு விதத்தில்..! எனவே, அவற்றில் எமது முழு அர்ப்பணமும் எவ்வித தவறுகள் இன்றி இருத்தல் அவசியம்..!

¨ ருகூஃ மற்றும் ஸுஜூதில் முதுகை நேராக வைக்காமலிருப்பது.

இது தொழுகையில் தவறான செயல்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ருகூஃவிலும் ஸுஜூதிலும் முதுகை நேராக வைக்காதவரின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

(ஆதார நூல்: அஹமத்)

ஏழு உறுப்புக்களைக் கொண்டு ஸஜ்தா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அவை: இரண்டு கால் விரல்கள், இரண்டு கால் முட்டுக்கள், இரண்டு உள்ளங்கைகள், நெற்றி மற்றும் மூக்கு.

(ஆதார நூல்: புகாரி)

¨ ஸுஜூதில் ஏழு உறுப்புக்களை சரியாக தரையில் வைக்காமலிருப்பது.

ஸஜ்தாவின் போது ஒரு காலையோ, அல்லது இரு கால்களையோ தரையை விட்டும் உயர்த்துவது. மூக்கை சிறிதளவு தரையை விட்டும் உயர்த்துவது போன்ற அனைத்தும் தவறான செயல்களாகும்.

¨ வேகமாகத் தொழுவது.

ருகூஃவையும் ஸுஜூதையும் முறையாக செய்யாமலிருப்பது தொழுகையில் திருடுவதகும்.  திருட்டால் மிகக் கெட்டவர்கள் தொழுகையில் திருடுபவர்களே! என்று நபி (ஸல்) கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! தொழுகையில் எவ்வாறு திருடுவர்? என்று கேட்டனர். ருகூஃவையும் ஸுஜூதையும் சரியாக முறையாகச் செய்யமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

                                                                                    (ஆதார நூல்: இப்னு அபீ ஷைபா)

Related Post