ஜகாத்: அது என்ன..?

இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள்.

இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள்.

ண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள். 8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள். 

ஜகாத் என்றால் என்ன?

“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்”, தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)

“ஜகாத்” என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க “ஜகா அஜ்ஜரஉ” (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் “ஜகா” எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
“தூய்மைப் படுத்துதல்” என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை “ஜகாத்” என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், “ஜகாத்” வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..

 “தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது” (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், “அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்” என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.

மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான்.
(ஃபத்ஹுல் பாரி: 3/332)

“ஜகாத்” என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.

இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு “தூய்மைப்படுத்துதல்” என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சியடைதல்”, “தூய்மைப் படுத்துதல்” போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

Related Post