தூய்மையும் தொழுகையும் – 5

– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்

ஃபிக்ஹ் - சட்டங்களின் மூலாதாரங்கள்

ஃபிக்ஹ் – சட்டங்களின் மூலாதாரங்கள்

தூய்மையும் தொழுகையும் – 5

1.4 ஃபிக்ஹ் – சட்டங்களின் மூலாதாரங்கள்

1. அடிப்படை, ஆரம்ப மூலாதாரங்கள்: திருக் குர்ஆன் மற்றும் சுன்னா எனும் நபிவழி.
2. அடுத்த நிலை மூலாதாரங்கள்: பொதுக் கருத்துக்கள் (இஜ்மா), ஒத்தக் கருத்துக்கள் (கியாஸ்)

1.5 ஃபிக்ஹ் – சட்டங்களின் கிளைகள்

ஃபிக்ஹ் நூல்கள் (திருக்குர்ஆன்,நபிவழி, பொதுக் கருத்துக்கள் (இஜ்மா), ஒத்தக் கருத்துக்கள் (கியாஸ்) ஆகியவற்றில் தெளிவாகவும்,நுணுக்கமாகவும் பெறப்பட்ட சட்டதிட்டங்கள் அடங்கியது) பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:-

எண் கிளை பொருள் உதாரணங்கள்

1. அல்-இபாதா (வணக்க வழிபாடுகள்)
வணக்க,வழிபாடுகளை நிறைவேற்றுவது எப்படி என்பதற்கான சட்டதிட்டங்களை உள்ளடக்கியது.
தஹாரா-ஸலாத்-ஜகாத்-ஸியாம்.

2. அல்-அஹ்வால் இஷ-ஷக்ஸியாஹ் (தனிப்பட்ட உறவுகள்)
குடும்பவியல் குறித்த சட்டதிட்டங்களை உள்ளடக்கியது.
திருமணம்-விவாகவிலக்கு-பாதுகாப்புக்கான பொறுப்புக்கள்.. முதலியன.

3. அல்-மு’அமலாத் (பொருளாதாரம்)
மக்களுக்கிடையிலான பரஸ்பர உறவுமுறைகள் குறித்த சட்டதிட்டங்கள். வணிகம்,வட்டி,முதல்,வாங்குதல் மற்றும் வாடகை,தயாரிப்புக்கள்,தரகு,ஊழடடயவநசயடள,குழரனெ,கடன்கள்-வெகுமதிகள்,முதலீடுகள்,பங்குடைமை,சொத்துக்கள்,வேளாண்மை

4. அஹ்காம் ஸல்தானியா (அரசாங்க நீதித்துறை சட்டதிட்டங்கள்)
ஆட்சியாளர்-ஆளுநருக்குரிய விதிமுறைகள் மற்றும் கடமைகள்
ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்புகள்
நீதியை நிலைநாட்டுதல்,சட்டங்களை அமல்படுத்துதல் அல்லது ரத்து செய்தல்.
ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்.. அவர்கள் அல்லாஹ்வின் வாக்குக்கு
அல்லது மார்க்கத்துக்கு மாறு செய்யயாத வரை..!

5. அல்-‘ஒகோபாத் (குற்றவியல் சட்டங்கள்)
குற்றவாளிகளைத் தண்டித்தல்,பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டுதல்
திருட்டு,கொலை,கொள்ளை,அவதூறு,வழிப்பறி,மது, உறுதிமொழிகள் மற்றும்
பரிகாரங்கள்,தீர்ப்புக்கள்,சாட்சிகள்!

6. சர்வதேச உறவுகள்
போர்,சமாதானம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான சட்டதிட்டங்கள்

7. நடத்தை-நெறிமுறைகள்
அழகிய குணநலன்களைப் பேணுதல்,அடக்கம் வெறுக்கத்தக்க மற்றும் தீய
நடத்தைகளுக்கு எதிரான எச்சரிக்கைகள்.

Related Post