தேகசுத்தியின்போது தவறுகள்..!

– மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி  

தேகசுத்தியின்போது தவறுகள்..!

தேகசுத்தியின்போது தவறுகள்..!

தேகசுத்தியின்போது தவறுகள்..!

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.

1) ஒளூ செய்ய ஆரம்பிக்கும் போது நிய்யத்தை வாயால் மொழிவது!

நிய்யத்து வைக்கக்கூடிய இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயினால் மொழிதல் தவறாகும். உளூ செய்வதற்கோ, பெருந்தொடக்கு, சிறு தொடக்கு மற்றும் ஜும்ஆவுக்கான குளிப்பு, இரு பெரு தினங்களில் குளிக்கக் கூடிய குளிப்புக்கள்; இவை அனைத்திற்கும் நிய்யத்து வைக்கும் இடம் உள்ளமாகும். வணக்க வழிபாட்டில் நிய்யத்து வைப்பதென்பது, உள்ளத்தால் அதை எண்ணுவதாகும். நபி (ஸல்) அவர்களது வழி முறையில் உளூ செய்யும் போது பிஸ்மி சொல்லியே ஆரம்பித்திருக்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் வாயினால் நிய்யத்தை மொழிதல் என்பது நபிகளார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும்.

2) உளூ செய்வதிலும், குளிப்பு கடமையான விடயங்களிலும் கவனமின்மையும், தூய்மை பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதில் பொடுபோக்காக இருத்தலும்!

தேகசுத்தியின்போது தவறுகள்..!

தேகசுத்தியின்போது தவறுகள்..!

இவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். உளூ செய்வதும், கடமையான குளிப்பிலிருந்து தூய்மையாகுவதும் தொழுவதற்கு மிக மிக முக்கியமானதாகும். இவைகளின்றி தொழுகை நிறைவேறாது. அவற்றை சரிவர செய்யாவிட்டாலும் தொழுகை நிறைவேறாது.

லகீத் இப்னு ஸப்ரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உளூவைப்பற்றி வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உளூவை பூரணமாக செய்து கொள்ளுங்கள்” என்றார்கள். (இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“குதிகாலை  சரிவர கழுவாதவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

இது அனைவருக்கும் மறதி ஏற்படக்கூடிய இடமாகும். இதனைப் போன்றே ஏனய இடங்களையும் சரிவர கழுவிக் கொள்ள வேண்டும். கட்டாயமாக அனைத்து உறுப்புக்களையும் பூரணமாக நீரினால் கழுவுவதுடன் தலையை மாத்திரம் இரண்டு காதுகளுடன் சேர்த்து ஒரு தடவை நீரினால் தடவிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறே நபி (ஸல் )அவர்கள் கூறி, செய்தும் இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இரண்டு காதுகளும் தலையுடன் சேர்ந்தவையாகும்” (இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய தொழுகையின் கூலியை அடைந்து கொள்வதற்காக, ஒரு முஸ்லிம் உளூவின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.  அனைத்து உறுப்புக்களையும் பூரணமாக சரிவர மும்மூன்று முறைகள் கழுவிக் கொள்வதோடு தலையையும் இரு காதுகளையும் சேர்த்து ஒரு முறை நீரினால் மஸஹ் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் அல்லாஹ் ஏவியவாறு உளூவை பூரணமாக செய்கின்றாரோ அது அவருக்கு ஜங்கால தொழுகைக்கு மத்தியில் இருக்கக்கூடிய (சிறு பாவங்களுக்கு) பரிகாரமாக அமையும்” (நஸஈ, இப்னு மாஜா)

3) ஒளூ செய்வதில் சந்தேகம் ஏற்படுவதும், ஒரு உறுப்பை மூன்று முறைகளுக்கு அதிகமாக கழுவியது என்பதில் தடுமாற்றமும்!

இவை ஷைத்தானின் ஊஷலாட்டங்களில் உள்ளவையாகும். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் மும்மூன்று முறைகளுக்கு அதிகமாக கழுவவில்லை. புகாரியில் வரக்கூடிய அறிவிப்பில்

“நபி (ஸல்) அவர்கள் மூன்று மூன்று முறை கழுவினார்கள்” என கூறப்பட்டிருக்கின்றது.

ஒரு முஸ்லிம் உளூ செய்ததன் பின்னால் ஷைத்தானின் ஊஷலாட்டங்களிலிருந்தும், சந்தேகங்களிலிருந்தும்  விடுபடவேண்டும், ஷைத்தானின் சூழ்ச்சியை விட்டு தவிர்ந்து கொள்வதற்காக மூன்று முறைகளுக்கு மேல் ஒவ்வொரு உறுப்பையும் கழுவுவதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்.

4) தண்ணீரை வீண் விரயம் செய்வது!

விண் விரயம் செய்வதென்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள் வீண் விரயம் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்கின்றவர்களை விரும்பமாட்டான்”

உளூ செய்யும் பொழுது நீரை தேவையான அளவிற்கு உபயோகித்து தனது உறுப்புக்களை கழுவிக்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக நீரை உபயோகித்து வீண் விரயம் செய்யக் கூடாது.

ஸஃது (ரழி) அவர்கள் உளூ செய்கின்ற பொழுது நபி (ஸல்) அவர்கள் அவரை கடந்து சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கூறினார்கள்:

“நீரை வீண் விரயம் செய்ய வேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஸஃது (ரழி) அவர்கள், “நீரிலும் வீண் விரயம் உண்டா?” என்று கேட்க, நபியவர்கள், “ஆமாம் உண்டு!  நீ ஓடுகின்ற ஆற்றில் இருந்தாலும் அதிலும் வீண் விரயம் உண்டு” என்றார்கள்”(ஆதாரம்: அஹ்மத்)

Related Post