மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!! – 4

 

பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல.

பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல.

-ஸினூஃபா அன்ஸார்

ம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில்  தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின்  வீரியமிக்க விசாரணைகள்….

பொய் நபி

‘இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு, அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன் வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை ‘நபி என்று வாதாடுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்:புகாரி 3609.

இதனடிப்படையில் காண்போமேயானால், வரலாறு நெடுகிலும் தன்னை இறைத்தூதர் என்றோ அல்லது இறை அவதாரம் என்றோ அல்லத இறைவனுக்கு இணையான அதிகாரம் படைத்தவர் என்றொ பொய் கூறி வாதாடிய பலர் வந்த சென்றுவிட்டனர். இன்றும்கூட வந்தகொண்டிருக்கின்றனர். அவர்களின் லீலைகளும் வெட்டவெளிச்சமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்ணலார் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தெ இந்த போலி இறைத்தூதத்துவ வாதம் தலைதூக்க ஆரம்பித்தவிட்டது.

சமீபகாலங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இயேசு கிறிஸ்து அவர்களின் மறுவருகையை குறித்த முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களின் நம்பிக்கையைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு, தம்மை இறைத்தூதர் என பலர் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.வரலாறு முழுவதும் கண்ட இத்தகைய போலி வாதத்துக்கு 20-21 நவீன நூற்றாண்டுகளும் விதிவிலக்கல்ல!

மிக சமீப காலங்களிலிருந்து இந்த போலி இறைத்தூதுத்துவவாத நாடக அரங்கேற்றங்களைக் கண்டால், 1954-ஆம் ஆண்டு யுனிஃபிகேஷன் சர்ச் எனும் அமைப்பின் ஸ்தாபகரான ஸுன் மியூங் மூன் என்பான் தனது 16-ஆவது வயதில் 1936-ஆம் ஆண்டு, ஜீஸஸ் தன் முன் தோன்றி, உலகில் ‘சுவன அரசாட்சி  ஏற்படுத்த இறைவன் தன்னை தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறி ஏமாற்றினான்.

அதேபோன்று Pநழிடந’ள வுநஅpடந எனும் அமைப்பின் தலைவன் ஜிம் ஜோக்ஸ் என்பவனுடைய தூதுத்துவ வாதத்தில் மதிமயங்கி போன ஏறக்குறைய 900-க்கும் அதிகமான மக்கள், அவன் சொல்படி, தென் அமெரிக்காவின் அடர்ந்த காடுகளில் கூட்டு தற்கொலை செய்துகொண்டார்கள். அதேபோல், உகாண்டாவின் பெரும்பாலான அடக்கஸ்தலங்களும் இதேபோன்று போலி இறைத்தூதுத்துவ வாதம் புரிந்த ஒருவனின் கைங்கர்யத்தால் ஏறக்குறைய அயிரத்துக்கும் அதிகமான மக்களின் தற்கொலைக்கு சாட்சியாக கண்டெடுக்கப்பட்டன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்த மற்றும் கனடாவில் ஜூரட் என்பவனின் அடியார்கள் தமத பச்சிளங் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டனர். இதற்குப் பின்னணியில் இருந்ததும் இதே போலி இறைத்தூதுத்துவ வாதம் புரிந்த ஜூரட்தான்.

டேவிட் குரேஷ் என்பான் தன்னை இறைத்தூதவனாக அறிவித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அமைந்த வாகோ-வில் தனது 74 அடியார்களுடன் உயிரை இழந்தான்.

இதேபோன்று, இன்றைய காலகட்டத்தில் மக்களின் ஆன்மிக அர்ப்பண நிலையை சாதகமாக்கிக் கொண்டு, சிலர் தம்மை போலி இரட்சகர்களாகவும், கடவுளின் அவதாரங்களாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி வருகின்றனர். உலகாயத மோகத்தில் மூழ்கி தம்மை மறந்திருக்கும் மக்களும் பிராயசித்தம் என எண்ணி, இவர்களின் காலடிகளில் தஞ்சமடைந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள செல்வங்களைக் குவிக்கின்றார்கள்.இறுதியில், அவர்கள் போலிகள் என தெரிய வருவது ஒன்று தங்கள் மடங்களைவிட்டு அவர்கள் ஓடிப் போகும்போது அல்லது நடிகைகளின் மஞ்சங்களில் தஞ்சம் புகும்போது!

Related Post