நம்பிக்கையே வாழ்வின் நாடி..!

நம்பிக்கையே வாழ்வின் நாடி..!

நம்பிக்கையே வாழ்வின் நாடி..!

இளவேனில்

றைநம்பிக்கை என்பது மனிதனின் வெற்றிக்கான அடிப்படை அம்சம் .வ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும்தான்..!

ஈமான் எனும் பதம் மொழியினடிப்படையில் நம்பிக்கை யெனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும். இறை விசுவாசமானது இறை வழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும்.

எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும்போது, ‘நாம் இவ்வுலகிற் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும்’ என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.

ஈமானின் அடிப்படைகள் 6உள்ளன. அவற்றை யொரு மனிதன் விசுவாசங்கொண்டு, அவற்றை மேலும் உறுதிப்படுத்தக் கூடியதாகத் தனது செயல்களை மாற்றிக் கொள்ளும்போதுதான் ஈமானின் ஒளி வாழ்க்கையிற் பிரகாசிக்கத் தொடங்கும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலிற் கீழ்க் காணும் 6அம்சங்களும் இடம்பெறுகின்றன. அவை:

1. அல்லாஹ்வை நம்புதல்

2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புதல்

3. அவனுடைய வேதங்களை நம்புதல்

4. அவனுடைய தூதர்களை நம்புதல்

5. மறுமையை நம்புதல்

6. விதியின்படியே நன்மை, தீமை யனைத்தும் ஏற்படுவதை நம்புதல்

(ஆதாரம்: முஸ்லிம்)

 இறை நம்பிக்கை

அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது; அவனுக்கு நிகராகவோ துணையாகவோ யாருமில்லை; வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன்தான்; அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள், பண்புகள் உள்ளன (என்ற இறை நம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயிலூடாகவே இஸ்லாத்தின்பாற் பிரவேசிக்க வேண்டும். அவனைப்பற்றி அல்-குர்ஆன் மிகச் சிறந்த அறிமுகந் தருகின்றது.

Related Post