டாக்டர். நாயக் பதில்கள் – 7 தொடர்ச்சி

தமிழில் : அபு இஸாரா

டாக்டர். நாயக் பதில்கள் – 7  தொடர்ச்சி

  1. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் – சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

  1. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் – அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான். ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் – மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் – தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

  1. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது – உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட – குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும். இன்றைய அறிவியல் – தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 ர்நசவண க்கு குறைவான சப்தத்தையும் 20000 ர்நசவண க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது. அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை – மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் – மகிழ்ச்சி – வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

  1. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.

ஓருமுறை – ஒரு சைவ உணவு உட்கொள்பவர் – என்னோடு வாதிடும்போது சொன்னார் – மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் – இரண்டு – அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட – இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் – பிறவியிலேயே செவிட்டு – ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் – குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான – உங்களது செவிட்டு ஊமை சகோதரரை – ஒருவர் கொலை செய்து விட்டார் – என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் – ஆகவே கொலையாளிக்கு – குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் – காது கேளாத – வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

  1. கால்நடைகள் பெருகும்:
உலகில் உள்ள ஒவ்வொருவரும் – சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் – கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் – சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் – கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் – சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் – கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் – மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

‘மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.’

Related Post