கொள்கையின் உறவு!

– அகார் முஹம்மத்
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்

கொள்கையின் உறவு!
றைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். 5:36 நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்!அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும்.
தேசம்,தேசீயம் என்று கூறுகின்றபோது, தேசம்,தேசீயம்,நாடு,இனம்,மொழி முதலான அம்சங்கள் குறித்து இஸ்லாமிய வாழ்க்கைநெறி என்ன கூறுகின்றபோது எனும் பார்வையில் நோக்குவதும் அதனை நாம் புரிந்துகொள்வதும் மிக முக்கியமானதாகும்.அடிப்படையில் ஓர் உண்மை இருக்கின்றது.அதாவது முஸ்லிம்கள் இனத்தால் இனம் காணப்படுகின்றவர்கள் அல்ல! அவர்கள் மொழியாலும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. தேசியத்தின் அடிப்படையில்கூட முஸ்லிம்களை அறிந்துகொள்ள முடியாது. மாற்றமாக,அவர்கள் கொள்கையின் அடிப்படையிலும்,அவர்கள் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் அடிப்படையிலும் இனங் காணப்படுகின்றவர்கள்..,அடையாளப்படுத்தப்படுபவர்கள்.சுருங்கக்கூறின், முஸ்லிம்கள் ஒரு கொள்கைவழி சமூகத்தசை; சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இதனால்தான், இறுதிமறை தன்னைப் பின்பற்றக்கூடிய முஸ்லிம்களைப் பற்றிய அடையாளத்தையும் அவர்களுக்கிடையிலான உறவைப் பற்றியும் சொல்லும்போதுபோது,மொழி-இனம்-தேசம் என்று எதனையும் முன்வைத்து அவர்களை அடையாளப்படுத்துவது கிடையாது.இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்கள்.ஈமான் எனும் இறைநம்பிக்கைதான் அவர்களை இணைப்பது.இறைநம்பிக்கையின் தொடர்பும்-பந்தமும்தான் அவர்களைப் பிணைப்பது என்கின்றது அது!கொள்கை மாறுபடுகின்றபோது.., இஸ்லாம் என்கின்ற இந்த அடிப்படை இல்லாதபோது..,இரத்த உறவுகூட இந்த வாழ்க்கைநெறியில் புறந்தள்ளப்படுகின்றது.இரத்த உறவையே மிகைத்ததாக இந்த ஈமானிய-இறைநம்பிக்கை உறவு இருந்தாக வேண்டும் என்பதே இஸ்லாமிய வாழ்க்கைநெறியின் உன்னத நிலைப்பாடு எனில் அது மிகையல்ல!அதனால்தான் இஸ்லாமிய அழைப்பபை ஏற்க மறுத்துவிட்ட இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் மைந்தனை ‘அவன்.., (நூஹ்)அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன்!’ என்று ஒதுக்கித் தள்ளச் சொன்னான் இறைவன்!
அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இறைக்கட்டளைப்படி (மக்காவிலிருந்து மதீனாவுக்கு) ஹிஜ்ரத் எனும் புலம்பெயர்தல் நிகழ்வை மேற்கொண்டபோது, தன்னைப் பின்பற்றிய நபித்தோழர்களுக்கிடையிலான உறவை கொள்கையின் அடிப்படையில்தான் உருவாக்கினார்கள்.இரத்த உறவுகளையும்,குடும்பப் பந்தத்தையும் மிகைத்து முஹாஜிர்களையும்,அன்ஸார்களையும் சகோதரர்களாகப் பிணைத்தார்கள்.அவ்கள் ஒவ்வொருவரையும் பரஸ்பரம் இரத்தஉறவின் அடிப்படையில் பிணைந்த சகோதரர்களைப் போன்று மாற்றினார்கள்.எனவே இஸ்லாத்தைப் பொறு;தவரையில் இஸ்லாத்துக்கான இணைப்புக்கான,உறவுக்கான அடிப்படை அம்சமாக இருப்பது இந்த இறைநம்பிக்கை கொள்கையை ஏற்றுக்கொள்வது அன்றி வேறில்லை.இனம்,நாடு,மொழி,பிரதேசம்,தேசம்,தேசீயம் ஆகியவற்றை வைத்து இஸ்லாம் எந்தவொரு அடிப்படையான முடிவுக்கும் தீர்மானத்துக்கும் வருவதில்லைஒரு முஸ்லிம் உடைய பார்வை சர்வதேசப் பார்வையாகவே அமையுமன்றி..,அமைய வேண்டுமேயன்றி., குறுகிய இன-தேச-தேசீயவாதத்துக்கு இஸ்லாத்தில் கிஞ்சுற்றும் இடமில்லை!எனவேதான் இஸ்லாம் இனம்-தேசம்-தேசீயம் எனம் கோட்பாடுகளை முன்வைப்பதில்லை.மாறாக, அவர்களை உம்மா… உம்மத்… எனும் சர்வதேசப் பார்வை கொண்ட.., தொலைநோக்குப் பார்வை கொண்ட கோட்பாட்டை முன்வைக்கின்றது.
எனவே, இவ்வாறு .இனம்,நாடு,மொழி,பிரதேசம்,தேசம்,தேசீயம் என்று நோக்கும்போது நாம் மேற்சொன்ன அடிப்படை அம்சத்ததைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இப்போது, நம் மனத்தில் ஒரு அதிமுக்கிய வினா எழக்கூடும்..!அவ்வாறெனில் நாட்டுப்பற்றுக்கு இடமளிப்பதில்லையா இஸ்லாம்..?இனஉணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லையா..?தாய்மொழிப்பற்று கொண்டிருப்பதை பிழையெனக் கருதுகின்றதா..?ஆம்..! இது நியாயமான கேள்வியே..!
இனம்,நாடு,மொழி,பிரதேசம்,தேசம்,தேசீயம் ஆகியவற்றின் மீது ஒருவருக்கு பற்று என்பது ஒரு யதார்த்தம்-குயஉவ மாத்திரமல்ல.., மாறாக.., இயல்பான ஒரு அடிப்படை அம்சமே..!இதனை இஸ்லாமிய வாழ்க்கைநெறி முற்றாக நிராகரிக்கவில்லை.
திருக் குர்ஆன் தீரமாக முழங்குகின்றது:
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்.49:13
இங்கு இறைவன் தனது படைப்புக்களாகிய ஆண்-பெண் என்று இருப்பது எவ்வாறு யதார்த்த அம்சங்களோ.., அதுபோன்றே.., குலங்கள்,கோத்திரங்கள் என்று இருப்பதும் ஒரு யதார்த்த அம்சமே.., அவனுடைய நாட்டமே எனும் கருத்தின் அடிப்படையில் சொல்கின்றான்.
அதேபோன்று மொழி வேறுபாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கின்றது..,ஆகுமான வழியில்..!அதாவது பல மொழிகள் இருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகவே திருக் குர்ஆன் பார்க்கின்றது.
எனவேதான், மனிதர்கள் தான் சார்ந்த இனத்துக்கு.., தான் பிறந்த மண்ணுக்கு..,தான் சார்ந்த தேசத்துக்கு.., தான் பேசுகின்ற மொழிக்கு என்பது போன்ற யதார்த்த அம்சங்களின்பால் பாசமுள்ளவர்களாக.., பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.

Related Post