ஏகத்துவ இறைகொள்கையான கலீமா..!

Allah 1லீமா ஷஹாதா எனும் ஏகஇறைக்கொள்கையானது மிக அழகிய மற்றும் விரிவான விளக்கம் கொண்டது…!ஷஹாதத் என்று அழைக்கப்படும் இச்சொற்றொடர்கள் இஸ்லாத்தின் அடிப்படையும் ஆணிவேருமாகும். புதிதாக இஸ்லாத்தைத் தழுவுவோரும், இஸ்லாமியப் பெற்றோர்களுக்கு பிறந்த முஸ்லிம்களும் இந்த ஷஹாதத் எனும் இச்சாட்சியத்தை நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதிபூண்டு செயலால் நல்லறம் புரியும்படி கட்டளையிடப்பட்டுள்ளனர்.

ஏகத்துவ இறைகொள்கையான கலீமா-ஷஹாதாவின் என்பது என்ன..?

لا إله إلا الله محمد رسول الله

‘அஷ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்து{ஹ வரஸுலுல்லாஹ’. ஷஹாதத் என்று அழைக்கப்படும் இச்சொற்றொடர்கள்  இஸ்லாத்தின் அடிப்படையும் ஆணிவேருமாகும்.  ‘அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குறிய நாயன் வேறு இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாய் இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்’ என்பதே ஷஹாதாவாகும். மிக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது ஷஹாதாவெனும் இச்சாட்சியத்தின் விளக்கம்:- அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் வானம், பூமி மற்றும் அதிலுள்ள படைப்பினங்களை படைத்த வல்லோன் அல்லாஹ்வுடன் அவனது படைப்பினமாகிய மனிதன் மனப்பூர்வமாய் செய்து கொண்ட உறுதிமொழி ஒப்பந்தமே ஷஹாதாவாகும். படைத்துக் காத்து பரிபாலித்து நாளை மறுiயில் நமக்கு நல்கவிருக்கும் நற்கூலியை நம்பிக்கை கொண்டு ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் என் வணக்க வழிபாடுகளை உறுதியாகச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வதும் அதன் பிரகாரம் தன் சொல்லால் உள்ளத்தால் நடத்தையால், நான் நடந்து காட்டுவேன் என்று கூறுவதும் இச்சாட்சியத்தில் அடங்கும். வானில் உள்ள கிரகங்கள். நட்சத்திரங்கள் பூமியில் உள்ள படைப்பினங்கள் மற்றுமுள்ள அனைத்துப் பொருட்களையும் பரிபக்குவமாகப் படைத்து அவற்றுக்கு இயக்கங்களை நிர்மானித்து அவற்றின் வாழ்வாதாரம் இவ்வுலகில் வாழ்ந்திருக்கும், மரணிக்கும் நாட்களை முறையே வரையறை செய்து நிர்வகிக்கும் சர்வசக்தி பெற்றவனே அல்லாஹ். மூலமின்றி படைத்துப் பரிபாலிக்கும் பூரண சக்தி அவனையன்றி வேறு எவர்க்கும் இல்லை. படைப்பது மட்டுமின்றி அதற்கு ஜீவ, மரணத்தை நிர்ணயிக்கும் முழு உரிமையும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே உரியது. அதுபோன்றே அவன் வழங்கும் வாழ்வாதாரமும் நாடியோர்க்கு தாராளமாகவும் நாடியோருக்குச் சுருக்கியும் வழங்குகிறான்..! மறைவான ஞானமும் அவனுக்கேயுரியது..! ஆக படைப்பாளன் என்று நம்பும் ஒவ்வொரு முஸ்லிமும் வல்லலோனின் இத்துணை அம்சங்களையும் சேர்த்து நம்பிக்கைக் கொள்ள வேண்டும். படைத்துப் பரிபாலிப்பவன் என்று நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளன் வணக்க வழிபாடுகளிலும் அவனையன்றி வேறு எவருக்கும் வணக்க வழிபாடுகளை செலுத்தக் கூடாது. ”இபாதத்” எனும் இவ்வணக்க வழிபாடுகளில் தொழுகை, பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல் போன்றவைகளோடு அல்லாஹ்வையன்றி அவனது படைப்பினங்களை வணங்குதல், அவைகள் தம்மை படைத்த இரட்சகனுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என நம்புதல் தம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் இப்படைப்பினங்கள் தமக்கு வல்லோன் அல்லாஹ்விடம் கேட்டு வாங்கித் தரும் என நம்புதல் அல்லாஹ்வின் படைப்பினங்களாகிய சூரியன், சந்திரன், செடி, கொடி, மலக்குகள், நபிமார்கள், மனிதர்களில் சிறந்தவர்கள், நீர், நெருப்பு போன்றவைகளுக்கு அல்லாஹ்வுக்கு செலுத்தும் எந்த வணக்க வழிபாடுகளையும் உரித்தாக்குவது தடுக்கப்பட்டுள்ளது. New Muslim 1இஸ்லாமல்லாத பிற மதத்தினர் செலுத்தும் வணக்க வழிபாடுகளாகிய சிலை வணக்கம், சூரிய- சந்திரனை வழிபாடு செய்தல், ஈஸா (அலை), உஜைர்(அலை) போன்ற இறைத்தூதர்களை இறைவனின் மகனாகச் சித்தரிப்பது வணக்க வழிபாடுகள் புரிவது நெருப்பினை வணங்குவது போன்ற வணக்க வழிபாடுகளிலிருந்தும் இஸ்லாம் வேறுபட்டு தனியாக நிற்கிறது. இதுபோன்ற வணக்கவழிபாடுகள் புரிந்த வௌ;வேறு சமுதாய மக்களை நேர்வழிப்படுத்த நிறைய இறைத்தூதர்கள் இப்பூவுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். இறைத்தூதர்களின் அறிவுரையை ஏற்றோர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மீட்சியும் புறக்கணித்தோர் பூண்டோடு அழிக்கப்பட்டு மடிந்ததையும் அருள் மறையின் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் நமக்கு ஏவியவற்றைப் பின்பற்றி, தடுத்தவற்றிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டியதை அருள் மறை அழகு படக் கூறுவதைக் கேளுங்கள். (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)

Related Post