எனது பாதை – அறிமுகம்

– தமிழில்: ஸினூஃபா அன்ஸார்

எனது பாதை – அறிமுகம்

பயன்பாட்டுக் கையேடு

இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள்

முஸ்லிம்கள் மற்றும் புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியோருக்கானது!

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும்

உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்..!

அறிமுகம்

அறிவுஞானங்களின் அடிப்படையான தன்னைக் குறித்த அறிவை அறிந்துகொள்ள எமக்கு அழகியதொரு வாய்ப்பை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழனைத்தும்..!
சாந்தியும் சமாதானமும் மனிதகுலம் முழுவதற்கும் அறிவுரை பகர வந்த ஆசிரியப் பெருந்தகையான நம்பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தார், அவருடைய தோழர்-தோழியர் அனைவர் மீதம் நிலவப் பிரார்த்திக்கின்றோம்.!
புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவிய சகோதர-சகோதரிகள், இஸ்லாமிய வாழ்க்கை nநிறிமுறையை விளக்கமாகவும் அதேவேளை எளிய முறையிலும் அறிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும். இதற்கு செயல்வடிவம் தரும் வகையில்,இஸ்லாமிய நிலையம், குவைத் – பல்வேறு இஸ்லாமிய கொள்கை-கோட்பாடுகளிலிருந்து அத்தியாவசியமானதும் இன்றியமையாததுமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கொணர்ந்திருக்கும் பாடத்திட்ட வடிவம்தான் தற்போது தங்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி செயல்படுவதுஎமது முதல் குறிக்கோளாக இருக்கின்றது. அதற்கடுத்து இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடிய எமது மாணாக்கர்களுக்கு சரியானதொரு அறிவுஞானத்தைக் கற்பித்துத் தரவேண்டும் என்பது எமது அடுத்த குறிக்கோள் ஆகும்!
இந்த நூலில் தரப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் திருக் குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையிலேயே அமைந்தவை. முனித இனத்தின் முயற்சியால் விளைந்த எதுவொன்றும் முற்றிலும் சரியானதாக இருக்கும் என்று கூறிட இயலாது. அறிவுஞானம் ஒவ்வொன்றின் சூத்ரதாரியாக இருப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே..! அவனே, ஒவ்வொன்றையும் அறிந்தவன்..!

சத்தியப் பாதையில் சரியானதொரு வெற்றியை இறைவன் உங்களுக்கு வழங்குவானாக!

இஸ்லாமிய நிலையம், குவைத்

Related Post