இறைவல்லமையின் இனிய அத்ததாட்சிகள்..!

உர்தூ மூலம்: மவ்வலானா மவ்தூதி
தொகுப்பு: அப்மு

 

அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி.

அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி.

பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக! அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான். ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது! எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள். மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.

(நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்

பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான்.

பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான்.

றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.”  மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக! அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!” பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன்.

ழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்

ழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்

தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்). உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர் யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள். மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள். (அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!” இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா?

அது எத்தகையது எனில், அவர்களின் (செய

அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும்

அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும்

ல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும். அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும். மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?” அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!” 

இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம். 

 

அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும்

அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும்

மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான். எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள்.

மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு

எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ

எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ

மீறிச் சென்று விட்டார்கள்.  எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது “அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்” என்று அவர்கள் கதறுவார்கள். மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம்.  ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள். அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும்.மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள். அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும். மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா?  ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே! நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.” 

மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”(நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்!

மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம்.  மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம்.

நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.

களின் வழியும் மிகமிகத் தவறானதாகும்.மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம்.அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம். இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.

இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.  மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம். மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா?இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர். 

மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா? நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.”

சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

யைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும். தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா?என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர். 

 

Related Post