இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை – 2 (அ)

இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.

இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.

(அ) வானவர்களை நம்புதல்

லிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.  மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.

இறைநம்பிக்கையாளன் ஒருவன் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சங்களைக் குறித்து இந்தத் தொடரில் கண்டு வருகின்றோம். ஆந்த வரிசையில், கடந்த அமர்வுகளில் அல்லாஹ் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை குறித்து அறிந்தோம்.
அடுத்து நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சமாக அல்லாஹ்வின் பிரத்யேகப் படைப்புக்களான, மலக்குகள் எனும் வானவர்களை நம்புவதைக் குறித்து இந்த அமர்வில் தங்ளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
பேரண்டத்தின்.., அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ், தான் அழகாய்ப் படைத்துப் பாதுகாப்பாகப் பரிபாலிக்கும் இந்தப் பரந்து விரிந்த பிரஞ்சத்தில், தனது விருப்பத்திற்கேற்பவும், பல்வேறு விதமான.., பவகையிலான.., நம் கற்பனைக்கும் எட்டாத வகையிலான மிகச் சிறந்த படைப்பினங்களைப் படைத்துள்ளான். ஆவற்றில் சிலவை எமது கற்பனையின் ஓரங்களில்கூட நிற்க முடியாதவை. ஆவற்றின் வகைகளும், எண்ணிக்கையும் கூட அவனையன்றி வேறு யார்தான் உணர முடியும்.., ஆம்..! இன்னும் ஏன்? நம்மைப் படைத்தவனும் அவன்தான்..!
அவ்வாறு நம்மைப் படைக்கும் முன்பே, அவனை வணங்கி, அவன் புகழ்பாடி, அவனுக்கு மட்டுடே சேவகம் புரிந்த கொண்டிருக்கும் ஒரு படைப்பை அவன் படைத்திருக்கின்றான். அந்த புதிய படைப்புதான்.., மலக்குகள்.. என்று வழங்கப்படும் வானவர்கள்..!
மனிதப் பார்வைகளுக்கு தெரிய வருபவைகள் சிலவே..! நாம் வாழும் நிலத்தில் ஊர்வன, வாழ்வன.., நீரில் நீந்துவன.., காற்றில் பறப்பன என உள்ளிட்ட பலவகை உயிரினங்களையும்.., அவற்றில் சிலவைகளை மட்டுமே நாம் காண்கின்றோம். மனிதத் தேடல் கண்டகொண்டவைகள் இதுபோல சிலவைதான். உலகில், நம் பார்வைகளுக்குப் புலப்படாமல் பல படைப்புக்கள் அவனால், படைக்கப்பட்டிருப்பது போல், நமது ஐம்புலன்களுக்குப் புலப்படாத, புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட்ட வகையிலான படைப்புக்களும் இருக்கின்றன.
கண்ணுக்குப் புலப்படும் படைப்பினங்களை வைத்தே, நாம் நமக்குத் தெரியாக இன்னபிற உலகப் படைப்புக்களை கற்பனை செய்து வியக்கின்றோம். இந்த நிலையில், புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட படைப்புக்களை அறிய நமது கற்பனைக் திரைகளை விரட்டிப் பார்த்தால், எமது சிந்தனைத் திறன்களின் சாட்டையை சற்று சுழற்றிப் பார்த்தால், நிச்சயமாக, திண்ணமாக, இறைபடைப்பின் வல்லமையைக் கண்டு வியந்து போவோம்.
இவ்வாறு நம் பார்வை புலன்களுக்கு அப்பாற்பட்ட வகையிலான, நம்மால் பார்க்க முடியாத வகையில் படைக்கப்பட்டிருக்கும் படைப்புக்களுள் ஒன்றாக. அல்லாஹ்வின் அழகிய படைப்பாக இருக்கும் வாழ்வினங்களுள்… படைப்பினங்களுள் ஒன்றுதான் இந்த அமர்வில் நாம் குறிப்பிட்டுள்ள நம்பிக்கை கொண்டுள்ள அம்சமான மலக்குகள் எனும் வானவர்கள் எனும் படைப்பு..!
அல்லாஹ்வின் இந்த இனத்தைப் பற்றி.., அவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டியஅ ம்சங்கள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன்.
வானவர்களை இறைவன் படைத்தது எவ்வாறு?? ஆம்..! மனிதப் படைப்பு போல் அன்றி, அல்லாஹ் வானவர்களை ஒளியால் படைத்தான். அவர்கள், தங்களுக்கு படைத்தவனால் இடப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றும் ஒரே நோக்கோடு படைக்கப்பட்டிருக்கின்றார்கள். தங்கள் படைப்பாளனாகிய ரப் ஆகிய அல்லாஹ்வினால், தமக்கு இடப்பட்ட பணிகளை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஏந்த நிலையிலும் அவர்கள், தமது இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாமல், அவனது கட்டளைகள் ஒவ்வொன்றையும் செவ்வனே, முழுக்க முழுக்க நடைமுறைப் படுத்தக்கூடிய அடிமைகளாக இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களைக் குறித்து அனைத்து அறிவுஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானதாகும்.
ஈமான் எனும் இறைநம்பிக்கைக்கான கிளைகளில் இரண்டாவதாக உள்ள மலக்குகள் எனும் வானவர்களை நம்புவது என்பது இல்லாமல்.., அவர்களை நம்பாமல் நமது ஈமான் முழுமை பெறவே முடியாது.

Related Post