இதுதான் சுவனம்..!

-M. அன்வர்தீன் 

துதான் சுவனம்..!

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம். எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக! திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.

சொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான்.

மேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய  சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது. அது மறுமை வாழ்வுக்காக இறைவனால் தயார் படுத்தப்பட்டிருக்கின்றது என்றும், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அவர்களுக்கு உண்டு என்ற தகவலையும் சொல்கிறது.

மேலும் அது அனைத்து வகையான அருட்கொடைகளும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஆன்மாக்கள்/இதயங்கள் விரும்பக்கூடிய அனைத்தும் கிடைக்கும் என்றும் அவர்களின் இதயங்களில் இருந்து கோபதாபங்கள், கவலைகள், மன வருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றும் சொல்கிறது. இறைவன் இதுபோன்ற ஒரு அருட்கொடையை உண்டாக்கி, மறுமை நாளில் தான் விரும்பக் கூடியவர்களுக்கு அளிப்பதற்காக தயாரித்து வைத்துள்ளான்.

சொர்க்கத்தின் மட்டற்ற மகிழ்ச்சி என்பது என்ன?  அது எவ்வாறு இந்த உலக மகிழ்ச்சியில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி ஒரு சில உதாரணங்ளோடு பார்ப்போம்.

வேதனை, துன்பம் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சி: –

மனிதர்கள் இந்த உலகத்தில் சந்தோஷம் அடைகின்ற அதே நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் வேதனையையும் அடைகின்றனர். ஒருவரின் இந்த உலக வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அடைந்த சுகத்தை விட அடைந்த கஷ்டங்களின் அளவு கூடுதலாகத் தான் இருக்கும். ஆனால் மறுமை வாழ்க்கையைப் பொறுத்த வரையில் முழுமையான மகிழ்ச்சி, சந்தோஷத்தை தவிர கஷ்டங்களையோ, துன்பங்களையோ சிறிதும் அனுபவிக்க மாட்டார்கள். அனைத்து வகையான வேதனை, துன்பங்களும் மறு உலகத்தில் இல்லாமல் போய் விடும். இது சம்பந்தமாக ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சொத்து சுகங்கள்:

மனிதன் தான் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு, அடிப்படை தேவையான பணம், ஆபரணங்கள், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடைகள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை மாய வித்தைகள் செய்தாவது அடைய முயற்சிக்கிறான். மேலும் அதுதான் வாழ்க்கையின் வெற்றி என்றும், நினைக்கிறான். அதிகமான மக்களுக்கு வெற்றி என்பது சொத்து சுகங்களோடு சம்பந்தபட்டது என்று நினைக்கின்றனர். அது உண்மைக்கு புறமானதாக இருந்த போதிலும் மிகப்பெறும் செல்வந்தர்கள், எவ்வளவு துக்ககரமான வாழ்க்கையை கடைபிடித்துள்ளார்கள் என்று நாம் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். சில சமயம் அது அவர்களை தற்கொலையின் பக்கம் கூட இட்டுச் செல்கிறது. சொத்து என்பது, என்ன விலை கொடுத்தாவது அடையக்கூடிய, மனிதனின் இயற்கையான வேட்கை ஆகும். இந்த விருப்பம் பூர்த்தி அடையாத போது மனிதனை துன்பமடைய செய்கிறது. இந்த காரணத்தினால் தான் இறைவன் சொர்க்க வாசிகள், அவர்கள் கற்பனை செய்த அனைத்து வகையான சொத்து சுகங்களையும் பெறுவார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.) (அல்-குர்ஆன் 43:71)

‘சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்’ (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 69:24)

அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும்,  ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்;  அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் – (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று. (அல்-குர்ஆன் 18:31)

நோயும் மரணமும்:

இந்த உலக வாழ்க்கையில் உள்ள வேதனையில் ஒன்று தான், தான் விரும்பியவர்களின் நோயும் மரணமும்,  ஆனால் சுவர்க்கத்தில் இவை இரண்டுமே இல்லை. யாரும் நோய் வாய்ப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி கூறும்போது: –

“அவர்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டார்கள், மூக்குச் சிந்தவோ எச்சில் துப்பவோ மாட்டார்கள்” (புகாரி)

சமுதாய உறவுகள்:

சுவர்க்கவாசிகள், தீய மற்றும் வேதனை தரக் கூடிய விமர்சனங்களையோ பேச்சுக்களையோ ஒரு போதும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே கேட்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: –

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).(அல்-குர்ஆன் 56:25-26)

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: ‘இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் – நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்’ (இதற்கு பதிலாக, ‘பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். (அல்-குர்ஆன் 7:43)

“சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர் வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ அடைய மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றுபோல இருக்கும். அவர்கள் இறைவனை காலையிலும்,  மாலையிலும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

சுவர்க்கத்திலே அவர்கள் மிகச்சிறந்த தோழர்களோடு இருப்பார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: –

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 4:69)

சொர்க்கவாசிகளின் இதயங்கள் சுத்தமானதாகவும், அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும், அவர்களுடைய செயல்கள் சரியானதாகவும் இருக்கும். அங்கே தீங்கு தரக்கூடிய, வேதனை ஏற்படுத்தக் கூடிய, கோப மூட்டக் கூடிய பேச்சுக்கள் இருக்காது.

ஆங்கில மூலக்கட்டுரை : www.islamreligion.com

 

Related Post