வணக்கமும் உதவிதேடலும்..! 1

– E.M. அப்துர் ரஹ்மான்

அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள்.

அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள்.

சத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் என் முன்னிலையில் தலைசாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள். பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு, உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா? பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல!  அவர்கள் எத்தகையோர் எனில் இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.

உதவி தேடுதலின் உண்மைப் பொருள்:

சிலர் இறைவனின் சிருஷ்டிகளை அவன் வெளியாகும் துறையென்று நம்பி வணங்குகின்றனர். முஸ்லிம்களிற் சிலருங்கூட பெரிய மகான்களின் சின்னங்களென சிலவற்றை வைத்துக் கொண்டு செய்யத் தகாத சில செய்கைகளை அவற்றின் பெயரால் செய்கின்றனர்; முத்தமிடுகின்றனர். சிலர் அவாகள் சமாதி கொண்டிருக்கும் இடங்களில் வாசற்படிகளைத் தொட்டுத் தடவிக்கொள்வதுடன் கஃபாவை வலஞ்சுற்றுவது போன்று சமாதியைச் சுற்றி அதை ஒரு வணக்கமாகவும் கருதுகின்றனர்.

சமாதி கொண்டிருக்கும் மகான்களுக்கும் வலிமார்களுக்கும் இறைவனுக்கு இருந்து வருகிற சக்திகள் போன்று இருப்பதாக எண்ணிக்கொண்டு இறைவனிடம் கையேந்தி உதவியருள வேண்டுவது போல வேண்டுகின்றனர். இவை யாவும் சந்தேகமின்றி தவறானவையும் இணைவைக்கும் தன்மையில் சேர்ப்பனவாகவும் இருக்கின்றன. இது பற்ற ிநபி (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறுகையில், “எனக்குப் பின்னர் தனது கப்ரை, (மண்ணரையை ) தொழும் இடமாக – ஸுஜுது செய்யும் இடமாக – ஆக்கிக் கொள்ளாதீர்கள்” (புகாரி, முஸ்லிம்) என்றுரைத்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்குவது ஹராம் என்னும் கொடிய குற்றமாகும். அவனைத் தவிர்த்து வேறெவருக்கும் ஸுஜுது செய்வதோ ருகூஉ செய்வதோ கூடாத செய்கைகளாகும். அவ்வாறு செய்தோர் இணவைக்கும் பெரும் குற்றத்தை செய்தவராவார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

ஒரு சமயம நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது தோழர்கள் “தங்களுக்கு நாங்கள் ஸுஜுது செய்ய விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள். இதனைப நபி (ஸல்) அவர்கள் மிகவும் கண்டிப்புடன் தடுத்து விட்டார்கள். (அல்ஹதீது. ஆதார நூல் :மிஷ்காத்)

இஸ்லாமிய சட்டங்கள்
இதுவுமின்றி அல்லாஹ்விற்கன்றி பிறரின் பெயரால் நோன்பு நோற்பது தர்மம் கொடுப்பதும் கூடாத செய்கைகளாகும். இறைவனின் திருவீடாக திரு கஃபாவைத் தவிர்த்து வேறு எதனையும் (தவாப்) சுற்றுவதும் தகாது ஹஜ்ஜு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட (இஹ்ராம்) உடை அணிவது போல் அணிந்து கொண்டு, அதை வணக்கமெனக் கருதிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக்கூடாது. அல்லாஹ்வின் பெயரால் அல்லாமல் வேறு ஒருவரின் பெயர் கூறி உயிர் பிராணிகளைப் பலியிடுதலும் கூடாது. இவ்வாறே இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் (துஆ) பிரார்த்தனை புரிவதும், அவரைச் சர்வ தேவைகளையும் நிறைவேற்றி சக துன்பங்களையும் அகற்றுபவர் என்று நினைப்பதும் கொடிய பாபங்களாகும் என இஸ்லாமிய சட்ட ஆதார நூல்கள் அறிவிக்கின்றன.

Related Post