New Muslims APP

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார்.

19:17 உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!” 19:18 அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”

19:19 மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” 19:20 அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;

19:21 மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!” 19:22 பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.

19:23 பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.

19:24 அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.

19:25 மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்;

19:26 ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”

19:27 பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே…! 19:28 ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!” 19:29 அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

19:30 உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;

19:31 பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!

19:32 மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.

19:33 என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”

19:34 இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.

19:35 எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.

19:36 மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”

19:37 ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர்.

எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்!

19:38 அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!

19:39 (நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது.

19:40 இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இஸ்லாம் எந்நிலையிலும் அதன் கொள்கைக் கோட்பாடுகளில் சிறிதும் விட்டுக்கொடுப்பதை ஏற்ப தில்லை. அதனால் தான் இஸ்லாம் அதன் கொள்கையில் தனித்து விளங்குகிறது.

தெளிந்த நீரோடை போன்ற குழப்பமற்ற இறைக் கொள்கையில் என்றும் நிலைத்து நிற்கிறது. காரணம் அது உண்மை யான இறைவனிடமிருந்துள்ள வழிகாட்டுதல் ஆகும்.

இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உண்மை யானவன், அவனையன்றி எதை அவர் கள் அழைக்கின்றார்களோ அது பொய் யானதாகும்,

நிச்சய மாக அல்லாஹ் அவன்தான் உயர்வானவன்,மிகப் பெரியவன் என்ற காரணத்தினாலாகும்               அல்குர்ஆன் 22: 62

இந்த ரீதியில் பிற மதத்தவர் தவறாக உருவாக்கியுள்ள நம்பிக்கையையோ செயல்பாட்டையோ அங்கீகரிக்கும் விதத்தில் ஒரு முஸ்லிம் நடந்து கொள்ளக் கூடாது என வழிகாட்டு கிறது.

பிற மதத்தவருக்கு ஒப்பா கும் விதத்தில் நடப்பதையும் தடை செய்கிறது. ”எவர் பிற சமூகத்திற்கு ஒப்பாகி றாரோ அவர் அவர்களைச் சேர்ந்த வராவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துக் கூறியுள்ளார்கள்.

இதன்படி கிறித்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர் கொண்டாடும் பண்டிகைகளுக்குப் பின்னனியிலுள்ள தவறான அல்லது கற்பனையான நம்பிக்கைகளை ஆமோதிக்கும் விதத்தில் ஒரு முஸ்லிமின் செயல்பாடு அமையக்கூடாது.

இந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ் குறித்து ஒரு முஸ்லி மிடம் சரியான பார்வை இருக்க வேண்டும்!
இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம்.

அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும்.

ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன் இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.

”நிச்சயமாக அல்லாஹ் லி அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராகரித்து விட்டனர்” அல்குர்ஆன் 5:17, 72

”நிச்சயமாக அல்லாஹ் லி மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் திட்டமாக (அவனை) நிராகரித்து விட்டனர்” அல்குர்ஆன் 5:73

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் லி அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்! அவன் (எவரையும்) பெறவுமில்லை, அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை! இன்னும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை! அல்குர்ஆன் 112: 1,4

இஸ்லாமின் உறுதியான இறைக் கோட்பாட்டையும் கிறிஸ்தவநம்பிக்கைகள் குறித்த இஸ்லாமிய நிலைபாட்டையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன! அடுத்ததாக, கிறிஸ்துமஸ் என்பது என்ன? இயேசுவின் பிறந்த தினம்!

இதனை அவர்கள் கொண்டாடுகின் றனர்! இதற்காக வாழ்த்துக்கள் பரி மாறப்படுகின்றன! இங்கே யாருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது?

எந்த நம்பிக்கையின் அடிப்படை யில் அது கொண்டாடப்படுகிறது? என்பதுதான் முக்கியம். கிறிஸ்தவர்கள் இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்று நம்பு கின்றனர்.

இன்னும் அவரையே கர்த் தர் என்றும் நம்புகின்றனர்.
அப்படி யானால் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர்களின் நம்பிக்கைப் படி அல்லாஹ்வுடைய மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.

அவர்களின் இந்த நம்பிக்கையை அல்லாஹ் இவ்வாறு மறுத்துக் கூறுகின்றான். உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர், மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்ற னர், இது அவர்களுடைய வாய் களால் கூறும் கூற்றாகும்.

முன் பிருந்த நிராகரிப்பாளர்களின் சொல்லுக்கு அவர்கள் ஒப்பா கின்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எவ்வாறு அவர் கள் (சத்தியத்தை விட்டும்) திருப் பப்படுகின்றனர்? அல்குர்ஆன் 9 :30

அல்லாஹ்வுடைய தூதரான ஈஸா மஸீஹ் (இயேசு) அல்லாஹ் வுடைய மகன் என்ற அவர்களின்கூற்று ஆதாரமற்ற இட்டுக் கட்டுதல் என்பது மட்டுமல்ல, இது அல்லாஹ் வின் உயர்ந்த தன்மைகளில் அவர்கள் ஏற்படுத்திய களங்கமாகும்!

இப்பேரணடத்தையே அதிர வைக்கும் மிகப்பெரிய அபாண்டமாகும்! இன்னும், ”அர்ரஹ்மான் ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

”நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்!.

அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று அவர் கள் அழைப்பதனால்லி(இவை நிகழ்ந்து விடக்கூடும்) ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.

ஏனென் றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ் மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.

நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர் களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.         அல்குர்ஆன் 19:88,95

அது மட்டுமல்ல, அவர்களுடைய இந்த இட்டுக்கட்டுதலைக் கூறும் இடங்களில் அதைவிட்டும் அல்லாஹ் மிகத்தூயவன் என்று அவன் பறைசாற்றுகிறான். மேலும், அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர், (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மிகத் தூய்மையானவன் அன்றியும் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவை, அனைத்தும்

அவனுக்கே அடிபணிகின்றன. அல்குர்ஆன் 2: 116 மேலும் பார்க்க: (10:68, 21:26)

இன்னும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் அவனது வல்லமைகளையும் திருநாமங்களையும் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவன் தனக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு நாடியிருந்தால் அவன் அதை செய்திருப்பான், ஆனால் அதை விட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கிறான் என்று பறைசாற்றுகிறான். ”

அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலவீனத்தைக் கொண்டும் எந்த உதவியாளனும் இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த

வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. அல்குர்ஆன் 17:111

அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனு டைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான். அல்குர்ஆன் 25:2

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

முஸ்லிமும் கிறிஸ்துமசும்

”இன்னும் நிச்சயமாக எங்கள் இறை வனுடைய மகத்துவம், மிக்க மேலா னது, அவன் எவரையும் (தன்னு டைய) மனைவியாகவோ, புதல்வ னாகவோ எடுத்துக்கொள்ள வில்லை. அல்குர்ஆன் 72:3

அவன் வானங்களையும், பூமியை யும் முன் மாதிரியின்றிப் படைத்த வன். அவனுக்கு மனைவி, எவ ரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ் வாறு பிள்ளை இருக்க முடியும்?

அவனே எல்லாப் பொருட்களை யும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 6:101 இன்னும் பின் வரும் வசனம் மிகவும் சிந்தனைக்குரியதாகும்! நபியே!)

நீர் கூறும்; ”அர்ரஹ் மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்கு மானால், (அதை) வணங்குவோ ரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!” அல்குர்ஆன் 43:81

முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். இந்த சமுதாயத்துக்கு எல்லா வகையிலும் சிறந்த முன்மாதிரி ஆவார்கள்.

அல்லாஹ்வுக்கு ஒரு பிள்ளை என்று இருந்திருந் தால் அதை நானே முதலில் வணங்கி உங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு வல்லமை மிக்க அல்லாஹ் அவர்களிடம் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவன் எடுத்துக் கொண்டான் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு இவ்வசனம் தெளிவான, உறுதியான, அறிவுப்பூர்வமான மறுப்பாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

மேலும் குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது இவ்வேதமானது லி அல்லாஹ் தனக்கு ஒருமகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்லக்கூடியவர்களை எச்சரிப்பதற்காகவும் இறக்கப்பட்டது என்று கூறுகிறான்.

”புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையோ னென்றால் தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான் லி அதில் எத்தகைய கோணலையும் அவன் ஆக்கவில்லை.

மிக்க உறுதியானதாக லி அவனிடமிருந்து கடினமான தண்டனையை எச்சரிக்கை செய்வதற்காகவும், நற்செயல்கள் செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கினான்) அதில் என்றென்றும் அவர்கள் தங்கியவர்களாக இருப்பர்.

அன்றியும், அல்லாஹ் மகனை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்) அவர்களுக்கு இதைப்பற்றி எவ்வித அறிவும் இல்லை, அவர்களுடைய மூதாதையர் களுக்கும் இல்லை, அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த வாக்கியம்) மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்.; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 18 : 1,5

இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம், அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை!

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆனால், அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை ஏசினான்.

ஆனால் அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை மறுத்தது, ”ஏற்கெனவே இருந்ததைப் போன்று மீண்டும் உயிர் கொடுத்து அவனை எழுப்ப என்னால்முடியாது” என்று அவன் எண்ணிய தாகும்.

அவன் என்னை ஏசியது, ”எனக்குக் குழந்தை உண்டு” என்று அவன் சொன்னதாகும். ஆனால், நான் ஒரு மனைவியையோ குழந்தை யையோ ஏற்படுத்திக்கொள்வதை விட்டும் தூய்மையானவன் ஆவேன் அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி) நூல் புகாரி 4482)

ஆக கிறிஸ்துமஸ் விழா என்பது அல்லாஹ்வுடைய மகனாக அவர் களாக கற்பனை செய்து கொண்ட இயேசுவின் பிறந்த நாளாகும்.

அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லது மறுத்துக் கொண்டு பாசாங் கான நிலையில் அன்றி ஒரு முஸ்லி மால் வாழ்த்து சொல்ல இயலாது.

இந்த இரண்டு நிலைகளுமே இஸ்லாமுக்கு முரணானதாகும்.

இது அல்லாமல் கிறிஸ்தவ அன்பர் களிடம் மனிதாபிமான அடிப்படை யில் நன்மை செய்வதையும் நல்லுற வைப் பேணுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

எனவே உங்கள் கிறிஸ்தவ அன்பர் கள் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சிக்கு அல்லது விருந்துக்கு உங்களை அழைத்தால் ஏற்றுக் கொள்ளாமல்,

நேர்வழியின் பால் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதே ஏற்றமான செயலாகும்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.