ஒளூ-தேகசுத்தி செய்வது எப்படி..?

ஒளூ 2

ஒளூ 2

ண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். ஒளூ-எனும் தேகசுத்தி இஸ்லாமியக் கடமையான தொழுகையுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்..!உளத்தூய்மையை வலியுறுத்தும் இஸ்லாம், உடல்தூய்மைக்கும் முக்கியத்துவம் தருகின்றது.!தொழுவதற்கு முன் ஒளூஎன்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும்.
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்’.-அல்-குர்ஆன் (5:6)
இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.ஒளூவின் பர்ளுகள்(கடமைகள்):

1.    உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.
2.    முகம் கழுவுதல்


3.    முழங்கைகள் வரை கைகளைக் கழுவுதல்
முகம் கழுவும்போது நிய்யத் வைக்க வேண்டும். நிய்யத் இல்லாமல் முகம் கழுவினால் உளு நிறைவேறாது.
4.    தலையின் சிறுபகுதியை மஸ்ஹூ செய்தல்
5.    கணுக்கால் வரை கால்களை கழுவுதல்
6.    இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்.
தலைமுடி முளைத்துள்ள இடம் முதல் நாடிக்குழி வரையிலும் மற்றும் இரண்டு செவி சோனைகள் வரையிலும் உள்ள பகுதிகளையும் கழுவ வேண்டும்.
கை, கால்களை குறிப்பிட்டுள்ளபடி சிறுபகுதி கூட விடாத அளவிற்கு கழுவ வேண்டும். உளுவின் உறுப்புகளான முகம், கை, தலை,  கால்களில் நீர் சேர்வதை தடுக்கும் நகப்பாலிஷ், உதட்டு சாயங்கள், பெயிண்ட் போன்ற கட்டியான திரவப்பொருள்களிருப்பின் ஒளு நிறைவேறாது.
வரிசைக் கிரமங்களுக்கு மாற்றமாக ஒளு செய்தால் ஒளு நிறைவேறாது.

ஒளூவின் சுன்னத்துக்கள்:

‘அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லா{ஹ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்து{ஹ வரஸூலு{ஹ. அல்ஹம்துலில்லாஹில்லதீ ஜஅலல் மாஅ தஹூரா.’ என்ற சொற்றொடரை உளுவின் ஆரம்பத்தில் ஓதுவதும், இதனை முழுமையாக ஓத முடியாவிட்டால் ‘பிஸ்மில்லாஹ்’ மட்டும் ஓதுவதும் சுன்னத்தாகும். அத்துடன் இரு கைகளின் முன் பகுதிகளை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுவதும் சுன்னத் ஆகும். மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும்.

ஒளூ 1

ஒளூ 1

மிஸ்வாக் செய்தபின் மூன்று முறை வாய் கொப்பளிப்பது, மூக்கின் உள் நீர் செலுத்தி அதன் அழுக்கை அகற்றுவதும், ஒரு சிரங்கை நீரிலேயே வாயையும், மூக்கையும் இணைத்தே மூன்று முறை கழுவுவதும,;  அடர்த்தியான தாடியை விரல்களால் கோதி கழுவுதல், கை கால் விரல்களை கோதி கழுவுதல் ஒவ்வொரு உறுப்பையும் மும்முறை கழுவுதல் ஆகிய இவையாவும் சுன்னத்துக்களாகும்.

ஒளூவின் ஒழுக்கங்கள்:

உளுச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், ‘ஹவ்ழ்’- நீர்தொட்டி உளுச் செய்பவரின் வலப் பாகத்திலும், ஊற்றிக் கழுவும்போது நீர்ப்பாத்திரம் அவரின் இடது பாகத்திலும் இருக்கும் அமைப்பில் உளுச் செய்தல், தேவையற்றவர்கள் பிறரின் உதவியின்றி தாமாகவே உளு செய்தல், வியாதி, குளிர், சளி போன்ற காரணமின்றி உளுச் செய்த நீரைத் துடைக்காமலிருத்தல் ஆகியவை உளுவின் ஒழுக்க முறைகளான சுன்னத்துக்களாகும். ஒவ்வொரு உறுப்பையும் கழுகும்போதும் ஷஹாதத் கலிமாவை
‘அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லா{ஹ வஹ்த{ஹ லாஷரீக ல{ஹ வஅஷ்ஹது அன்ன ஸய்யிதனா முஹம்மதன் அப்து{ஹ வரஸூலு{ஹ’ என்று ஓதுவது சுன்னத் ஆகும்.
உளுச் செய்தபின் இரு கரங்களையும் முகத்தையும் வான் நோக்கி உயர்த்தி
‘அஷஹது அன்லாஇலாஹ இல்லல்லா{ஹ வஹ்த{ஹ லாஷரீகல{ஹ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்து{ஹ வரஸூலு{ஹ அல்லா{ஹம்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன வஜ்அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன ஸுப்ஹானகல்லா{ஹம்ம வபிஹம்திக வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வஅதூபு இலைக.’ என்ற துஆவை ஓதுவதும், உயர்த்திய கரங்களைத் தாழ்த்தி மூன்று முறை ‘இன்னா அன்ஜல்னா’ ஸூராவை ஓதுவதும் அதன்பின்பு
‘அல்லா{ஹம்மஃபிர்லீ தன்பீ வவஸ்ஸிஃ லீ ஃபீ தாரீ வபாரிக் லீ ஃபீ ரிஸ்கீ வலாதஃப்தின்னீ பிமா ஜவய்த அன்னீ’
என்று ஓதுவதும் சுன்னத்தாகும்.
ஒருவர் உளு செய்தபின் அதன் துஆவை ஓதினால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும். அவர் விரும்பிய வாயில் வழியாக நுழைந்து செல்லட்டும்; என்றும்(நூல்: முஸ்லிம்)
‘அவருடைய அந்தச் செயல் முத்திரையிட்டுப் பாதுகாக்கப்படுகிறது. அதன் நன்மையை அவர் அடைந்தே தீருவார்’ என்றும் (நூல்: ஹாகிம்) துஆவின் பெருமையையும் சிறப்பையும் பற்றி அண்ணலாரின் அருள்மொழிகள் இருக்கின்றன.

ஒளூவின் சுன்னத்தான தொழுகை:

உளுச் செய்யும் நேரங்களிலெல்லாம் உளுவின் சுன்னத்தான தொழுகையைநிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்துடன் இரண்டு ரக்அத்துகள் தொழுவது சுன்னத்தாகும். முதல் ரக்அத்தில் ஸூரத்துல் பாத்திஹாவிற்குப் பின்
‘வலவ் அன்ன{ஹம் இதுளலமூ அன்ஃபுஸுஹம் ஜாஊக ஃபஸ்தஃக் ஃபருல்லாஹ வஸ்தக்ஃபர ல{ஹமுர் ரஸூலு லவஜதுல்லாஹ தவ்வாபர் ரஹீமா’
என்ற வசனத்தை ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில்,
‘வமன் யஃமல் ஸூஅன் அவ்யள்லிம் நஃப்ஸுஹ ஃதும்ம யஸ்தஃபிரில்லாஹ யஜிதில்லாஹ ஙஃபூரர் ரஹீமா’ என்ற ஆயத்தை ஓதுவதும் சுன்னத்தாகும்.
-நன்றி:காயல்பட்னம்.இன்

Related Post