New Muslims APP

இஸ்லாம் கூறும் இயேசு பற்றிய உண்மைகள்..! – 1

-டாக்டர் மனேஹ் ஹாமத் அல்ஜொஹானி

தொகுப்பு:மு.அ.அப்துல் முஸவ்விர்

நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்.

நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்.

டனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;  பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை! மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை. என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!” இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும். எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.

முன்னுரை :

இஸ்லாம் மார்க்கத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப் பற்றியதாகும். இந்தக் கருத்து வேறுபாடுகள் தான் இரண்டு மார்க்கத்தையும பிரித்து வைத்திருப்பது.

இயேசு கிறிஸ்துவை – முஸ்லிம்கள் – ஆப்ரகாம், மோசஸ், முஹம்மது நபி போன்றவர்களை மதிப்பது போல் அவர் மிகப் பெரிய தீர்க்கதரிசி, இறைவனின் தூதர் என்று மதிப்பு அன்பு செலுத்துகின்றனர்.

கிறிஸ்துவர்கள், இதற்கு மாறாக, இயேசுவைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தன்னைக் கடவுள் என்றோ – கடவுளின் குமாரர் என்றோ இயேசு ஒரு போதும் கூறிக் கொள்ளவில்லை என்று இஸ்லாம் போதிக்கின்றது.

இயேசுவின் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த கிறிஸ்துவ மார்க்கத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கிறது. அவை என்ன?

  1. திரி ஏகத்துவம் (முத்தெய்வக் கொள்கை – பிதா, மகன், பரிசுத்த ஆவி)
  2. இயேசுவின் கடவுள் தன்மை
  3. கடவுளின் குமாரன் என்ற கிறிஸ்துவின் அந்தஸ்து!
  4. ஜென்மப்பாவம் அல்லது முதற்பாவம்
  5. பாவ மன்னிப்பு

மேற்சொன்ன கொள்கை எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் அளிக்க விரும்பிய தகுதிக்கு அதிகமாக அவரை மிக மிக உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைவுகள் என்பது தெளிவாகும்.

இந்த அதீதமான – அளவுக்கு அதிகமான கொள்கைகள் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்குமுள்ள ஒற்றுமைகளைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

  • தூய கன்னிக்கு (மேரிக்கு)ப் பிறந்தவர் இயேசு!
  • தொட்டிலில் இருக்கும் போதே இயேசு பேசினார்
  • அற்புதங்களைச் செய்தவர் இயேசு
  • இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக உலகிற்கு வருவார்
தூய கன்னிக்கு (மேரிக்கு)ப் பிறந்தவர் இயேசு!

தூய கன்னிக்கு (மேரிக்கு)ப் பிறந்தவர் இயேசு!

இதை எல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றார்கள் என்ற உண்மையை கருத்துவேறுபாடுகள் மறைத்து விடுகின்றன. இந்த சிறுநூலில் வருகின்ற இரண்டு கட்டுரைகள் இயேசு நாதர் பற்றிய இஸ்லாம் வரைகின்ற உண்மையாக ஓவியத்தைத் தர முயல்கின்றன. கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் மூலாதாரமான உபதேசங்களிலிருந்து மாறுபாடுகின்றார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன.

முதற் கட்டுரை – கிறிஸ்துவ மார்க்கத்தின் பிடியில் இப்போதும் இருக்கின்ற மேதைகளும் சிந்தனையாளர்களும் இயேசுநாதர் பற்றி இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை மெல்ல மெல்ல ஒப்புக் கொள்வதை எடுத்துக் சொல்கிறது.

இன்னமும் அவர்கள் பைபிள் பற்றி விரிவாகவும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடும் ஆராய்வார்களானால் இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை இன்னமும் தெளிவாக ஒப்புக் கொள்வார்கள். காலம் செல்லச் செல்ல இஸ்லாமிய உண்மை மிகத் தெளிவான ஒளியோடு அவர்களுக்கு விளங்கும்.

புனிதக் குர்ஆன் இதைக் கீழ்கண்ட வரிகளில் கூறுகின்றது.

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
அறிந்து கொள்க் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்க் நிச்சயமாக அவன்
எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்

(அல்குர்ஆன் 41:53)

தகவுரை :

இயேசு நாதரைப் பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கண்ணோட்டம் இருவேறு தீவிர கருத்துக்களுக்கு இடையில் இருக்கின்றது.

யூதர்கள் – இயேசு நாதரை இறைவனின் தூதுவர் அல்ல என்றும் – கள்ளத் தீர்க்கதரிசி என்றும் நிராகரிக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்களோ இயேசு நாதரை இறைவனின் குமாரர் எனக் கூறி வணங்கவும் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இயேசு நாதரை இறைவனின் உயரிய இறைத்தூதர் எனக் கருதுகிறது. ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மது நபி போன்றோரை மதிப்பது போல் மதிக்கின்றது.

இஸ்லாமின் இந்தக் கருத்து ஓரிறைத் தத்துவத்திற்கு ஓரிறைவனின் தெய்வ வழிகாட்டுதலுக்கும் இறைத்தூதர்களின் ஓரிறைச் செய்திக்கும் ஏற்புடையதாக இருப்பதைக் காணலாம்.

இறைநாட்டத்திற்கு முழுமையாக சரண் அடைதல் எனும் இந்த இஸ்லாமியத் தத்துவம் இறைவனால் ஆதி மனிதரான ஆதமுக்குத் தரப்பட்டு அவரது வழி வந்தோருக்கும் போய்ச் சேர்ந்தது.

ஆப்ரஹாம், மோஸே, இயேசு இறுதியாக முஹம்மது நபி என்ற வரிசைப்படி வந்த இறைத்தூதர்களுக்கு – மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு – மனிதனுக்கும் மனிதர்க்கும் உள்ள உறவு – மனிதருக்கும் சுற்றுச்சார்புக்கும் இருக்கும் உறவு பற்றிக் கூறப்பட்டது. இறைக்கட்டளையின்படி மனிதன் இந்த உறவுகளோடு எப்படி வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

எனவே, வேதங்கள் வெளிப்பட்ட மதங்களிலேயே தோன்றியிருக்கின்ற வேறுபாடுகள் எல்லாம் மனிதன் உருவாக்கி நுழைத்த வேறுபாடுகளே என்று இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் பாத்திரத்தைப் பற்றி யூத – கிறிஸ்துவ – இஸ்லாம் மார்க்கங்கள் வேறுபாடு கொண்டிருப்பதற்கும் இது விதிவிலக்கல்ல.

திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி அவரது வின்னேற்றம், அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றி முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 1.00 out of 5)
Loading...

Leave a Reply


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.