அல்லாஹ் எங்கே..?

-மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா

தமிழில்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

தொகுப்பு: மு.அ. அப்துல் முஸவ்விர்

அல்லாஹ் எங்கே..?

அல்லாஹ் எங்கே..?

அல்லாஹ் எங்கே..?

நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது!அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள். நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள். நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்.

அல்லாஹ் வானத்திலும் பூமியிலும் இருக்கிறான் என்றும், பூமியில் அவன் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது ஏதோ ஒரு பயத்தின் காரணத்தால் என்று சொலலக் கூடியவனின் பின்னால் தொழமுடியுமா?

பதில் : ஸுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்பவர்களின் கொள்கை யாதெனில், அல்லாஹ் அனைத்து படைப்பினங்களுக்கு மேல் உள்ளான். அல்லாஹ் அர்ஷின் மீது அவனது கண்ணியத்திற்கேற்ப உள்ளான் என்பதாகும்.

அல்லாஹ் திருமறையில்,

“அல்லாஹ் (தன் கண்ணியத்தற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான்’ (தாஹா: 5).

‘வானங்களிலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும் அவனுக்கே உரியவையாகும், (யாவரையும் விட) அவனே மிக்க உயர்வானவன், மிக மகத்தானவன்’ (அஷ்ஷுரா: 4).

‘மேலும் அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன், அன்றியும் அவனே தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்கு உணர்பவன்’ (அல் அன்ஆம் : 18).

ஈஸா நபியைப் பற்றி சொல்லும் போது

‘அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்’ (4: 158).

அவன் வானத்திலும், பூமியிலும்’ இதன் மூலம் பொருள் கொள்வது படைப்பினங்களைச் சூழ அவனது ஞானம் இருப்பதென்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

‘நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் இருக்கிறான்’”

‘அல்லாஹ் தனது தாத்துடன் பூமயில் இருக்கிறான்’ என எவன் நம்பிக்கைக் கொள்கிறானோ அது குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும், ஏகோபித்த முடிவுக்கும் மாற்றமானதாகும். இது ‘ஹலூலியா’ என்ற பிரிவினரின் கொள்கையாகும். அவர்கள் அல்லாஹ் அனைத்து இடங்களிலும் அல்லாஹ் இருப்பதாக பலர் தவறான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். எவர் அறியாமையில் இவ்வாறு கூறுகிறாரோ அவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்த முயல வேண்டும். எவர் தெரிந்து இவ்வாறு கூறுவாரோ அவன் நிராகரிப்பாளனாகக் கருதப்படுவான். அவனுக்குப் பின்னால் தொழுவது கூடாது, அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.

Related Post