இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை – 2 (ஆ)

இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

லிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.  மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.

வானவர்களின் ஆதி

மனிதர்களின் ஆதிபிதாவான ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் களிமண்ணால் படைத்தான். ஜின்கள் என்ற மற்றொருபடைப்பினத்தை நெருப்பால் படைத்தான் என்பதை நாம் அறிந்துள்ளோம். இதுபோல, அல்லாஹ் வானவர்கள் என்றஇனத்தை ஒளியால் படைத்துள்ளான். மனிதர்களாகிய நாம் அவர்களை பார்க்க இயலாது. ஆனால், அவர்களோ நம்மைப்பார்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான சான்றுகளை இப்போது பார்ப்போம்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். ஜின்’கள் தீப்பிழம்பின் மூலம் படைக்கப்பட்டனர். (ஆதிமனிதர்) ஆதம்,உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : முஸ்லிம் (5722)

வானவர்கள்  எங்கே இருக்கிறார்கள்?

பூமியில் மட்டும் வசிக்கும் விதத்தில் பல உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? அவைகளும் நீர்வாழ்வன,நிலவாழ்வன என்று தங்களின் வாழ்விடத்தின் மூலம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் நிலத்தில்வாழ்பவைகளின் பட்டியலிலே அங்கம் வகிக்கிறோம். நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காட்டு விலங்குகள், வீட்டுவிலங்குகள் என்று வேறுபாடு காணப்படுகிறது. இத்துடன் வாழ்விடத்தின் வாயிலாக உயிரினங்களுக்கு மத்தியில் வரும்வித்தியாசம் முடிந்துவிடவில்லை. இந்த வரிசையில் மலக்குகள், பரந்து விரிந்த வானத்தை வாழ்விடமாக கொண்டிருக்கும்படைப்பினமாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை வானவர்கள் என்றும் நாம் அழைக்கிறோம். இதோ திருக்குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.

வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர! (திருக்குர்ஆன் 53 : 26)

 முன்கண்ட வேதவரிகளின் மூலம் மலக்குகள் என்ற இனத்தினர் வானத்தில் வாழ்பவர்கள் என்பதை சந்தேகமற அறிந்துக்கொண்டோம். அதேசமயம், அவர்கள் எப்போதும் எதற்காகவும் பூமிக்கு வரமாட்டார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது.பூமிக்கு சென்றுவரும்படி அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டால் அவர்கள் பூமிக்கும் வருவார்கள்; படைத்தவன்கொடுத்தப் பணியை குறையின்றி நிறைவேற்றுவார்கள் என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இந்தசெய்திக்குச் சான்றாக இருக்கும் இறைச் செய்திகளைப் பாருங்கள்.

நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்

மலக்குகள் பூமிக்கு வருவார்கள் என்று சொன்னதுமே அவர்கள்

மலக்குகள் பூமிக்கு வருவார்கள் என்று சொன்னதுமே அவர்கள்

லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன்.

(திருக்குர்ஆன் 19 : 64) நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், “நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச்சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள். அப்போதுதான் “(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியேதவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்கும் இடையேஇருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும்(19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),  புகாரி (4731).

வஹீ அல்லாத மற்ற பணிகள்:

மலக்குகள் பூமிக்கு வருவார்கள் என்று சொன்னதுமே அவர்கள் வஹீ எனும் இறை செய்தியை கொண்டு வருவதற்காக மட்டுமே இங்கு வருவார்கள் என்று நினைப்பதும் தவறு.அதல்லாத வேறு காரியங்களை செய்வதற்கும் பூமிக்கு சென்றுவருமாறு மலக்குகளுக்கு அல்லாஹ் கட்ட

ளையிடுவான். பிரச்சனையை தீர்த்தல், தூதர்களுக்கு உதவுதல்,நல்லடியார்களுக்கு நற்செய்தி சொல்லுதல், மறுப்பாளர்களுக்கு தண்டனையை கொண்டு வருதல். நற்காரியங்களை பதிவுசெய்தல் என்பது போன்ற பற்பலப் பணிகளை நிறைவேற்ற வானவர்கள் வந்து செல்வார்கள். இதற்கான ஆதாரங்களுள்ஒன்றை மட்டும் இப்போது காண்போம்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்குஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப்போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்கமாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும்,பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்கஎங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர்.

அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது, அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ்அநீதி இழைத்தோரை அறிந்தவன். “தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்” என்றுஅவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விடஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை” என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாகவழங்கியிருக்கிறான்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்” என்று அவர்கூறினார். “அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில்உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின்குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள்நம்பிக்கைக் கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு சான்று உள்ளது” என்று அவர் (நபி) கூறினார்.

 (அல்குர்ஆன் 2 : 246,248)

“தாலூத்துக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, மக்களிடம் ஓர் அலங்காரப் பெட்டியை வானவர்கள்சுமந்து வருவார்கள் என்பதன் மூலம் வஹீ அல்லாத மற்ற மற்ற பணிகளைச் செய்வதற்கும் வானவர்கள் பூமிக்கு வந்துசெல்வார்கள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

Related Post