பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா? – 4

ரோஷன்

தன்னுடன் ஆரம்பகாலந்தொட்டே தோளொடு தோளாக இருந்து, இஸ்லாமிய வளர்ச்சிப் பணியில் அனைத்து வகைகளிலும் உற்ற துணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுடனான தனது உறவை வலுப்படுத்தி பறைசாற்ற முயன்றார் முஹம்மத் (ஸல்) அவர்கள்!

தன்னுடன் ஆரம்பகாலந்தொட்டே தோளொடு தோளாக இருந்து, இஸ்லாமிய வளர்ச்சிப் பணியில் அனைத்து வகைகளிலும் உற்ற துணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுடனான தனது உறவை வலுப்படுத்தி பறைசாற்ற முயன்றார் முஹம்மத் (ஸல்) அவர்கள்!

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை……!

(03)சமூகவியல் காரணிகள்.

ன்னுடன் ஆரம்பகாலந்தொட்டே தோளொடு தோளாக இருந்து, இஸ்லாமிய வளர்ச்சிப் பணியில் அனைத்து வகைகளிலும் உற்ற துணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுடனான தனது உறவை வலுப்படுத்தி பறைசாற்ற முயன்றார் முஹம்மத் (ஸல்) அவர்கள்! இதற்கு செயல்வடிவம் தரும் வகையில் அவரடைய மகளார் ஆயிஷா (ரலி) அவர்களை மணமடித்துக் கொண்டார்கள்!

அதன் பின்னர் உமர் 9ரலி0 அவர்களுடனான தொடர்பை குறைஷிக் குலத்தாருடன் நெருக்கப்படுத்தி கவுரவப்படுத்தும் வகையில் அன்னாருரடைய மகளார் ஹஃபஸா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கணவனை இழந்நதவர்கள்!

அதேபோல், சத்தியநெறியை ஏற்ற பெண்ணொருத்தி, கணவனை இழந்து

அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டு, தனது கோத்திரத்தினரிடத்தில் மீளப் போனால், அசத்தியத்தில் இருக்கும் அவருடைய சமூகம் அவரை எந்த நிலைக்கு ஆட்படுத்தம் என்பது தெளிவு! சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் என்பது தெளிவு!அஆதனால்தான் இத்தகையதொரு நிர்க்கதியில் இருந்த அன்னனை ஸவ்தா(ரலி) அவர்களை மீட்டெடுக்கவும் இஸ்லாத்தில் அவருக்கிருந்த உறுதி,விருப்பம் என்பனவற்றிற்கு பரிசாகவும் மற்றும் அவருடைய கணவர் இஸ்லாத்தில் கொண்ட அசையா நம்பிக்கையை கவுரவப்படுத்தும் முகமாகவும் அன்னாரை மணந்துகொண்டார்கள் முஹம்மத் 9ஸல்) அவர்கள்!

கணவனை இழந்த பெண்களுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத் தந்து, அவர்தம் குழந்தைகளை சரியான பாதயில் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கணவனை இழந்த பெண்டிரான ஸைனப் பின்த் ஹுஸைமா(ரலி) அவர்களை அன்னாருடைய 60-ஆவது வயதிலும்,ஹின்த் பின் அபி உமையா(ரலி) எனும் நான்கு குழந்தைகளின் தாயையும் மணமுடித்தார்கள்.

Related Post