பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா? – 5

 

இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை……!

இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை……!

ரோஷன்

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை……!

(04)அரசியல் காரணிகள்.

இஸ்லாமிய அரசு மழலைப்பருவத்திலிருந்த வேளையில், அதன் பாதுகாப்புக்கும்,ஸ்திரத்தன்மைக்கும் ஏற்ற வகையிலான படைபலமோ.ஆயுதப்பலமோ அரம்பத்தில் கொண்டிருக்கவில்லை. ஆதலால், தனது அரசின் சரியான வளர்ச்சிக்கும். ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும் எந்தவொரு வழிவகையையும் ஆகுமான முறையில் மேற்கொள்ள முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வாங்கவில்லை. அதில்  ஒன்றுதான், பகைமை பாராட்டும் கோத்திரத்தாருடன் நல்லுறவைப் பேண அவர்தம் கோத்pரப் பெண்ணணை மணமுடித்துக் கொண்டதும்!

பனூ முஸ்தலிக் கோத்திரத்தாருடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவர,முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட அக்கோத்திர தலைவனின் மனைவியருள் ஒருவரான ஜூவைரியா (ரலி) அவர்களை. அன்னாருடய பூரண சம்மமதத்துடன் மணமுடித்தக் கொண்டார்கள்.போர்க்கைதிகளுடன் அண்ணலாருடய இத்தகைய ச5க நடைமறை அக்கோத்திரத்தார் அனைவரையும் இஸ்லாமிய நிழலின் கீழ் கொண்ட வந்ததுடன். இஸ்லாமிய அரசின் நிலைத்தன்மைக்குக் கட்டியம் கூறுவதாயும் அமைந்தது.

தனது சிறிய தந்தையின் மனைவியாருடைய தங்கையான, வயது முதிர்ந்த, குறைஷி வம்ச ஹிலாலியா கோத்திர மங்கையான மைமூனா (ரலி) , ஸ ஃபிய்யா(ரலி),உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரை மணமடித்ததும் இதனடிப்படையில்தான்!

கோத்திரங்களிற்கிடையே பல வகையான சச்சரவுகளும் அமைதியின்மையும் நிலவிய சமூக சூழ்நிலையில் பலதரப்பட்ட கோத்திர பெண்களுடன் ஒன்றாக குடும்ப வாழ்வு நடாத்தியதன் மூலம் நபி எனும் வகையில் நபி(ஸல்) முன்னுதாரணம் காட்டினார்கள்.அத்தோடு பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த பெண்களை ஒருபக்கச் சார்பற்று தனது மனைவியராக வைத்திருந்ததன் மூலம் சகோதரத்துவம் பற்றிய உணர்வை மனித உள்ளங்களில் பதிப்பதற்கு நபி(ஸல்) முயற்சித்தார்கள்.

எனவே சுருங்கக் கூறின், ஆகவே, மனிதகுலத்தின் ஈடிணையில்லா இந்த பகலவனின் பலதாரமண வாழ்வு சில விமர்சகர்களின் கருத்துப்படி காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக வேண்டி நடைபெற்ற கீழ்த்தரமான நடவடிக்கை அல்ல! மாறாக, உயர்ந்த இலட்சியங்களையும் படிப்பினைகளையும் முன்னிறுத்தி நடைபெற்ற ஆக்கபூர்வமான செயல்முறை என்பது இந்த நான்கு காரணங்களையும் ஆராய்ந்து படிக்கின்ற போது தெளிவாகின்றது.

Related Post