அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 10

– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 10

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

புனித கஅபா-வின் புணர் நிர்மாணம்

புனித கஅபா-வின் புணர் நிர்மாணம்

புனித கஅபா-வின் புணர் நிர்மாணம்

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும்போது, பெரும் வெள்ளம் ஒன்று, கஅபா-வை சேதப்படுத்தியது. அதன் நிலையையும், கண்ணியத்தையும் காக்க எண்ணி, குறைஷியர், அதனை புணர் நிர்மாணம் செய்ய முடிவெடுத்தனர். அதனை ஆகுமான நல்வழியில் சம்பாதித்த பொருளைக் கொண்டே புணர் நிர்மாணம் செய்ய நாடினர். இதனால், விபச்சாரம், கந்துவட்டி மற்றும் அநியாய முறையில் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தை இதற்காக பயன்படுத்தக் கூடாது குறைஷ் தலைவர்கள் முடிவு செய்தனர். கஅபா-வின் சுவர்களை மீண்டும் எழுப்பியபோது, அதற்கான பணிகள் பல்வேறு குலத்தாரிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஓவ்வொரு குலமும் கஅபா-வின் ஏதேனுமொரு பகுதியை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றது. இந்தப் பணிகள் அனைத்தும் அமைதியாகத் தொடர்ந்தது.., கஅபா-வின் ஒர பகுதியான புனிதக் கல்லை அதற்குரிய இடத்தில் மீண்டும் வைக்கும் பணி துவங்கும் வரை..! இந்தப் பணியை ஏற்று செய்வதற்கான உரிமையைக் கொண்டாடும் பிரச்னையில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஓவ்வொருவரும் அந்த கவுரவத்தைக் கோரியதால், இந்தப் பிரச்னையால், இரத்தக்களரி தவிர்க்க முடியாததாகிவிடுமோ என்று எண்ணத் தலைப்படும் அளவுக்கு நான்கைந்து நாட்கள் வரை இந்த சச்சரவு நீடித்தது. இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக, தலைவர்களில் முதியவராக இருந்த ஒருவர் ஆலோசனை வழங்கினார்: கஅபா-வின் வாயில் வழியே அடுத்து நுழையும் முதல் மனிதரிடம் இப்பிரச்னைக்கு தீர்வு கேட்போம்.
அல்லாஹ்வின் ஏற்பாட்டைப் பாருங்கள்! அப்போது அவ்வழியே இறைஇல்லத்துக்குள் முதல் மனிதராக நுழைகின்றார், மனிதர்குல மாணிக்கமாம் கண்மணி முஹம்மத் (ஸல்) அவரகள்! ஆவரைக் கண்டவுடன் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்: ‘அதோ வந்துவிட்டார், அல்-அமீன் (உண்மையாளர்). நூம் அனைவரும் அவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய தருணம் இது!’
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரச்னையின் அனைத்து விவரங்களையும் விசாரித்து அறிந்தார்கள். பின்னர், ஒரு விரிப்பைக் கொணரச் செய்தார்கள். அதனைத் தரையில் விரித்து, புனிதக் கல்லை அதன் மையப்பகுதியில் வைத்தார்கள். பின்னர், கோத்திரப் பிரதிநிதிகளிடம் விரிப்பின் ஒரு பகுதியைப் பிடித்துத் தாங்குமாறு பணித்தார்கள். இவ்வாறு, வைக்கப்பட வேண்டிய இடத்தை அடைந்தவுடன், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் சுயம் தமது கரங்களால், அந்தக் கல்லை அதற்குரிய சரியான நிலையில் பொருத்தினார்கள்.
இவ்வாறு, சிக்கலான ஒரு பிரச்னையை அதுவும், மாபெரும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு இக்கட்டான பிரச்னையை, தன் விவேகத்தாலும், அறிவுக்கூர்மையுடன் மிக இலாவகமாக கையாண்டு முடிவு கண்ட, நம்பெருமானார் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமயோசித ஞானத்தை பாராட்ட வார்த்தைகள் போதா..!

Related Post