அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 4

எல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு

எல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு

மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்  

 தமிழில்:இளவேனில்

அத்தியாயம் 2

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

 பார் போற்றும் அண்ணலார்  முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை..!

எல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பாக்கியமும் பேறும், மதிப்பும் மரியாதையும் மிக்க மூதாதையர் பரம்பரையை வழங்கினான்.அன்னாரின் மூதாதையர் தொடர், இப்பராஹீம் (அலை) அவர்களின் குமாரராகிய இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வரை நீளுகின்றது. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்: வல்ல இறைவன் தனது அடியாராகிய இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரிலிருந்தம் கினானா அவர்களை தூய்மைப்படுத்தித் தேர்ந்தெடத்துக் கொண்டான்.மேலும், கினானவின் பிள்ளைச் செல்வங்களிளலிருந்தும், குறைஷியரை தேர்ந்தெடுத்துக் கொண்டான்.அந்தக் குறைஷியரிலிருந்தும் பனூஹாஷிம் கோத்திரத்தாரையும், பனூ ஹாஷிம் கோத்திரத்தாரிலிருந்து என்னையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (ஆதாரம்: முஸ்லிம்)

அவர் முஹம்மத் (ஸல்)! .. பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம் பின் அப்த் முனாஃப் பின் குஸை பின் கிலாப் பின் முர்ரா பின் க’அப் பின் லோ’இ பின் காலிப் பின் ஃபஹர் பின் மலிக் பின் அந்-நத்ர் பின் கினானா பின் குஸைமன் பின் முத்ரிகா பின் எலியாஸ் பின் முதர் பின் நிஸார் பின் ம’அத் பின் அத்னான்..!

அண்ணலார் (ஸல்) அவர்களுடைய மூத்த முப்பாட்டனார் ஹாஷிம் அவர்களின் பெயரிலிருந்தே அன்னாருடைய பரம்பரை ஹாஷிமி என்று வழங்கப்பட்டது.அரபிய தீபகற்பத்தில் மிகவும் மதிப்பும் மரியாதையும் மிக்க குலத்தவராக விளங்கிய குறைஷ் எனும் அரபிய குலத்தை சேர்ந்தவர்தாம் அண்ணலார் (ஸல்) அவர்கள்.,!

அண்ணல் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்

1. ஹாஷிம் புனித யாத்திரிகர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார் இவர். ஹாஷிம் அவர்கள் செல்வந்தர், நேர்மையாளர். புனித யாத்திரிகர்களுக்கு முதன் முதலில் ரொட்டி உணவை வழங்கியவர் இவரே!அன்னாருடைய இயற்பெயர் அம்ர் என்பது! ஆனால், பிற்காலத்தில், (புனித யாத்திரிகர்களுக்கு) ரொட்டி பிசைந்து தயாரிக்கும் பணியை மேற்கொண்டதால், அவருக்கு இந்த புனைப்பெயர் வந்தது. மேலும். குறைஷ்களின் (பிரசித்தி பெற்ற) கோடை மற்றும் குளிர்கால இரட்டைப் பயணங்களை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவரும் இவரே!

2. அப்துல் முத்தலிப் ஹாஷிம் அவர்களின் மரணத்துக்குப் பின்னர், புனித யாத்திரிகர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கும் பொறுப்பு, அவருடைய மகனாராகிய அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது.குறைஷ் குலத்தவரின் பெருந்தலைவராக விளங்கியவர் இவர்.அவருக்கு பத்து புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்.

 அப்துல் முத்தலிப் அவர்களின் வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகள்!

 ஜம்ஜம் - கிணற்றை தோண்டுதல்.

ஜம்ஜம் – கிணற்றை தோண்டுதல்.

1. ஜம்ஜம் – கிணற்றை தோண்டுதல்.

ஒரு முறை, குறிப்பிட்டதொரு இடத்தில் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு, அப்துல் முத்தலிப் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை கிடைத்தது.அவரும் அவ்வாறே செய்ய, அதன் பின்னர், புனித யாத்திரிகர்களுக்கு ஜம்ஜம் நீரை வழங்கும் வழக்கமும் உண்டானது.

2. யானை நிகழ்வு: எமன் நாட்டில் இருந்த அப்ரஹா அல்-ஹபஷி எனும் அபீசீனிய (எத்தியோப்பிய) ஆளுநர் தொடர்பான இந்த பிரபல்ய வரலாற்று நிகழ்வு நடந்தது. கஅபா-விற்கு அரபியர்கள் பெருந்திரளாக  புனிதப் பயணம் மேற்கொள்வதைக் கண்ட அவன், அவர்களின் பயணத்தை தனது நாட்டுக்கு திசைதிருப்பும் நோக்கத்துடன், எமன் நாட்டின் ஸனா-வில் ஒரு மாபெரும் தேவாலயத்தை எழுப்பினான். கினானா குலத்தைச் சேர்ந்த ஒருவன் அவனுடைய இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டான்.எனவே, ஒரு நாள் இரவில் தேவாலயத்தினுள் நுழைந்து, அதன் முன்பக்க சுவரை    கொண்டு சேதப்படுத்திவிட்டான். இதனைக் கேட்ட அப்ரஹா கடுஞ்சினம் கொண்ட வெகுண்டெழுந்தான். அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் படையுடன், கஅபாவை இடிக்கப் புறப்பட்டான். அவனுடைய படையில் ஒன்பது அல்லது பதிமூன்று யானைகளும் இருந்தன.தனக்காக ஒரு பெரிய யானையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். முஸ்தலிஃபாவிற்கும் மினாவுக்கும் இடைப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை அடையும் வரை தொடர்ந்து பயணித்தது அவன் படை. ஆதன் பின்னர், அவனது யானை மேலும் நகர்ந்து செல்லாமல்,மண்டியிட்டு அமர்ந்து முரண்டு பிடித்தது. அதனை கிழக்கு, வடக்கு அல்லது தெற்குப் பக்கமாக நகர்த்தும்போதெல்லாம் உடனே நகர ஆரம்பித்தது. ஆனால், மேற்கு திசையில் கஅபா-வை நோக்கி நகரச் செய்ய முயன்றால், மேலும் முன்னேறிச் செல்லாது மண்டியிட்டு அமரந்து கொண்டது. அதேவேளை, அல்லாஹ், அப்படையினரை நோக்கி பறவைக் கூட்டத்தை அனுப்பினான். அவை சுட்ட களிமன் கற்களை அந்தப் படையினர் மீது எறிந்தன. இந்த தாக்குதலால் அப்படை, அறுத்தெறியப்பட்ட புற்களாக ஆகியது. அந்தப் பறவைகள், உருவத்தில் குருவி மற்றும் சிட்டுக்குருவி போன்று இருந்தன.ஒவ்வொன்றும் மும்மூன்று கற்களை சுமந்து வந்தன. ஒன்று அவற்றின் அலகுகளிலும், மற்ற இரண்டும் அவற்றின்

யானை நிகழ்வு

யானை நிகழ்வு

இறக்கைகளிலும் சுமந்து வந்தன. அந்த கற்கள் அப்ரஹா-வின் படைவீரர்களின் முதுகெலும்புகளைப் பதம் பார்த்தது. அவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மாபெரும் எண்ணிக்கையிலான படையினர் இவ்வாறு கொல்லப்பட, மற்றவர்களோ, அங்கும் இங்கும் தப்பியோடத் தலைப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் கொல்லப்பட்டனர். சுயம் அப்ரஹாவே. தனது விரல்நுனிகளில் காயப்படுத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டான். ஆவன் ஸனா-வை அடைந்தபோது, பீதியடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, மிக விரைவிலேயே மரணத்தைத் தழுவினான். இந்த யானை நிகழ்வு, முஹர்ரம் மாதத்தில், அண்ணலார் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு, ஐம்பது அல்லது ஐம்பத்தைந்த நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

Related Post