அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 11

– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்

– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 11

அழகிய ஆதவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பண்பு நலன். இறைத்தூதுத்துவத்துக்கு முன்னர்.!

அழகிய ஆதவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்)

அழகிய ஆதவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்)

மூகப் பெறுப்பு மிக்க அழகிய பண்புநலன்களைக் கொண்டதாக இருந்தது அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் இளமைக்காலம்..! தனது நேர்மைஇ நீதிஇ பரிவுஇ பொறுமைஇ அடக்கம் மற்றும் அறிவுஞானம் ஆகிய குணநலன்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் அவர்.! அவருடைய நீண்ட மவுன சுபாவம் சத்தியத்தைக் குறித்து ஆராயவும்இ தியானம் மேற்கொள்ளவும் அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது.பயன் தரத்தக்கவும்இ ஆக்கபூர்வமானதுமான பணிகளில் அவர் ஆர்வத்துடனும்இ முழுமனத்துடனும் ஈடுபட்டார். அவ்வாறல்லாது வீணான மற்றும் தீமையான செயல்பாடுகளாக அவை இருப்பின்இ தம்மை அதிலிருந்து விடுவித்து தனிமையிடம் தஞ்சம் புகுவார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மது அருந்தியதில்லை. சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட பிராணிகளை உண்டதில்லைஇ சிலைவணக்க விழாக்களில் கலந்துகொண்டதில்லை. அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா போன்ற சிலைகளின் மீது சத்தியம் செய்வதை விரும்புபவராக இருந்ததில்லை. வாழ்க்கை உல்லாசங்களில் பங்கு பெறக்கூடிய அல்லது கண்ணியக் குறைவான அம்சங்களில் தானும் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட வேளைகளில்இ அல்லாஹ் அவற்றிலிருந்தும் அவரைக் பாதுகாக்கும் ஏற்பாட்டை செய்தான்.

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது சமூகத்தினர் செய்து வந்த செயல்கள் எதனையும் நான் என்றும் செய்ய துணிந்ததில்லை.இ இரு சந்தர்பங்களில் தவிர..! உவ்வொரு முறையும் என் இறைவன்இ அவ்வாறு நான் செய்ய துணிகின்றேனா என்பதை கண்காணித்ததும் மட்டுமல்லாதுஇ அவ்வாறு செய்வதிலிருந்தும் என்னைப் பாதுகாத்தான். ஒருமுறை மக்காவின் உயரப் பகுதியில் இருந்தவேளைஇ என்னுடன் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சகதோழனிடம்இ எனது ஆட்ட மந்தையை கவனித்துக் கொள்ள கோரினேன்.ஏனெனில்இ அப்போது நான் மக்காவின் கீழ்ப்பகுதிக்கு சென்றுஇ இளைஞர்கள் செய்வதுபோல்இ என்னை கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ள நாடினேன். மக்காவின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்த முதல் வீட்டை அடைந்தபோதுஇ உற்சாக இசையைக் கேட்டேன். உள்ளே சென்று ‘என்ன இது?’ என்றேன். யாரோ பதிலளித்தார்: ‘இது திருமண கேளிக்கை’. நான் அங்கு அமர்ந்துவிட்டேன்.ஆனால்இ உடனே ஆழ்ந்த உறக்கத்தில் அழ்ந்துவிட்டேன். கதிரவனின் வெப்பத்தால் நான் விழித்துக் கொண்டேன்.அதன் பின்னர்இ சகதோழனிடம் சென்றுஇ எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினேன். அதன் பின்னர் நான் மீண்டும் அத்தகைய முயற்சியில் இறங்கியதில்லை.

 

Related Post